கமல் படமா? என்னால நடிக்க முடியாது.. பதறிபோய் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட சினேகா..

Actress Sneha: நடிகர் கமல்ஹாசன் உடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்க நடிகை சினேகா பயந்துள்ளார். நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அப்படி விரும்புகிறேன் படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது மேலும் இவருடைய அழகும் நடிப்பும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்ததால் விஜய், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் ஆகியோர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது. சிரிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சினேகாவிற்கு புன்னகை அரசி என பெயர் வைத்தனர்.

புது கார், சாக்கு மூட்டையில் பணம்.. பிரபல நடிகரை அசத்திய விஜயகாந்த்..! மறக்க முடியாத தருணம்..

இந்நிலையில் கோவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வந்த சினேகா தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இதனை அடுத்து தற்பொழுது விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகா கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நடைபெற்றது. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிப்பதற்கு சினேகா பயந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இதுதான் நடக்குது.. புதுசா ஒன்னும் சொல்லிக்கறதுக்கு இல்ல – வெளுத்து விட்ட நடிகை ராதிகா

அதாவது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது சரண் சினேகாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது ஹீரோ யார் என்று சினேகா கேட்க கமல்ஹாசன் என்று சொன்னவுடன் பதறிப்போன சினேகா நடிக்க முடியாது என சொல்லிவிட்டாராம். எனவே ஏன் என்று சரண் கேட்க சினேகா கமல் படம் என்றால் லிப் லாக் இருக்கும் இந்த படத்தில் நான் லிப்லாக் செய்ய மாட்டேன் இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டால் மட்டும் தான் நடிக்கிறேன் என்று கூற அதற்கு சரணும் ஒப்புக்கொண்டார் அதன் பிறகு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்துள்ளார் சினேகா.