புது கார், சாக்கு மூட்டையில் பணம்.. பிரபல நடிகரை அசத்திய விஜயகாந்த்..! மறக்க முடியாத தருணம்..

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை மறக்க முடியாத நடிகர் என்றால் அது விஜயகாந்த் என பல நடிகர் நடிகைகள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். நடிகர் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதன் என்ற பெயர் எடுத்தவர். இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி பல நடிகர் நடிகைகள் சமீப காலமாக பேட்டியில் பேசி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் லிவிங்ஸ்டன்  விஜயகாந்த் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியாக பேசி உள்ளார்.

கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் “டார்லிங் டார்லிங் டார்லிங்” இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ் தான் ஹீரோவாக நடித்திருந்தார் 1982 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது இதில் ஸ்டேஷன் மாஸ்டராக நடிகர் லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். இதன் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.

பிறகு 1990 ஆம் ஆண்டு ஹீரோவாக நடிக்க தொடங்கினார் அந்த வகையில் காமெடியனாகவும் குணசத்திர வேடத்திலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அப்படிதான் கேப்டன் விஜயகாந்த் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரனில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய வல்லரசு, வானத்தைப்போல ஆகிய திரைப்படங்களிலும் லிவிங்ஸ்டன் இணைத்து நடத்து இருந்தார்.

நடிகர் லிவிங்ஸ்டன் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயகாந்த் குறித்து பேசி நெகிழ வைத்துள்ளார் அவர் கூறியதாவது சினிமாவில் எனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்த ஒரே மனிதர் விஜயகாந்த் தான் எனக்கூறினார் லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்த சுந்தர புருஷன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படத்தில் லிவிங்ஸ்டன் அவர்களுடன் ரம்பா, வடிவேலு ஆகிவர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

அப்படி இருக்கும் நிலையில் தான் விஜயகாந்த்  லிவிங்ஸ்டனை அழைத்து தன்னுடைய கம்பெனிக்கு ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த திரைப்படத்திற்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் என்ற டைட்டில் உருவானது. ஆனால் அந்த திரைப்படம் வெளியாகவில்லை உனக்கும் எனக்கும் கல்யாணம் திரைப்படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து  இருந்தார் அதற்கு வாக்குறுதியும் கொடுத்திருந்தார்.

மேலும் லிவிங்ஸ்டன் அவர்களை பார்த்து விஜயகாந்த் இனி பைக்கில் போக வேண்டாம் காரில் போங்க எனக்கூறி ராவுத்தர் ஃபிலிம் சார்பில் லிவிங்ஸ்டன் அவர்களுக்கு புதிய கார் வாங்கி கொடுத்தார். அந்த சமயத்தில் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே லிவிங்ஸ்டன் சம்பளமாக வாங்கி வந்தார் ஆனால் விஜயகாந்த் அவர்கள் ஏழரை லட்சம் சம்பளமாக கொடுத்து லிவிங்ஸ்டன் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

அப்பொழுது லிவிங்ஸ்டன் அவர்கள் ஏழரை லட்சத்தை 100 ரூபாய் நோட்டுகளாக கேட்டாராம் அதற்கு காரணம் தன்னுடைய அம்மாவிடம் நான் சினிமாவில் நடிக்க சென்று நிறைய பணம் சம்பாதிப்பேன் என கூறி இருந்தாராம் அதனால்தான் ஏழரை லட்சம் ரூபாயை நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றி லிவிங்ஸ்டன் அவர்களிடம் கொடுத்துள்ளார் இந்த தகவலை சமீபத்தில் லிவிங்ஸ்டன்  ஒரு பேட்டியில் கூறி மகிழ்ந்துள்ளார்.