அயலான் கதையை வெளிப்படையாக சொன்ன இயக்குனர்.. பட்ஜெட் ரொம்ப பெருசு.. போட்ட காச எடுப்பீங்களா.?

Ayalaan Movie: இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் அயலான் படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் பட்ஜெட் குறித்து சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆர் ரவிச்சந்திரன்.

இவருடைய முதல் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்ற நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து இரண்டாவது படமாக அயலான் உருவாகி வருகிறது. அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க ராகுல் பிரதீப் சிங் லீட் ரோலில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

கையில் வேட்டு விழுந்ததால் காதல் பற்றிக் கொண்டது.! அமர்க்களம் அஜித் ஷாலினி காதலை புட்டு புட்டு வைத்த இயக்குனர்..

இந்த படத்திற்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சூட்டிங் முடியாமல் சில பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 50 நாட்கள் படப்பிடிப்பு இருந்த காரணத்தினால் அதற்கான காட்சிகளை மூன்று வருடங்களாக எடுத்ததாக இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

மேலும் சில காட்சிகள் மறுபடியும் எடுத்ததாகவும் கூறிய நிலையில் அயலான் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் சிவகார்த்திகேயன் அதிக பட்ஜெட் படங்களில் ஒன்றாம். இயக்குனர் ரவிக்குமாரின் முதல் படமான இன்று நேற்று நாளை படத்தின் பட்ஜெட்டை விட 25 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதி கதையை சொல்லி அஜித்தை நடிக்க அழைத்த பிரபல இயக்குனர்.! ஆப்பு எந்த பக்கம் இருந்து வேணாலும் வரும்

மேலும் அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மிகவும் அழகாக இருக்கும் இயற்கை விரும்பியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். இயற்கையும் இயற்கையாக உருவான அனைத்து உயிரையும் சமமாக நடத்தும் ஒருவனாக தான் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் அயலான் படத்தில் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது ஒரு ஏலியன் அவனது வாழ்க்கையில் வருகிறது வந்த பிறகு ஹீரோ என்னவாகிறது என்பதுதான் இப்படத்தின் மீதி கதை எனவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.