சும்மா கிடந்த விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்கியதால் பல கோடி நஷ்டம் அடைந்த சிவகார்த்திகேயன்.. இதுக்கு பேர் தான் ஊம குத்தா..

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் பல ஷோக்கலை தொகுத்து வழங்கி வந்தார் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளியானது படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி கூறியுள்ளார்.

அயர்லான் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டில் தயாரிப்பு செலவு மட்டும் 90 கோடி பப்ளிசிட்டிக்கு நான்கு கோடி, விநாயகம் செய்ய 1.5 கோடி, இப்படி கடன் வாங்கி 75 கோடி ,மொத்த பட்ஜெட் 170.5 கோடி . 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அயலான் திரைப்படம் 90 கோடி பட்ஜெட்டில் ஒரு மாத வட்டியே 2.75 கோடி வருடத்திற்கு 30.40 கோடியாக இருக்கிறது அதேபோல் பேச்சுவார்த்தைக்கு பிறகு 35 கோடியை பைனான்ஸ் நிறுவனத்திடம் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார்.

9 வருடங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.!

அதேபோல் சம்பளமாக சிவகார்த்திகேயனுக்கு 5 கோடியும், ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு புள்ளி ஐந்து கோடியும் ஒலிப்பதிவாளர் நிரவுஷா அவர்களுக்கு 2 கோடியும். ரகுல் பிரீத் சிங் அவர்களுக்கு ஒரு கோடியும் இயக்குனர் ரவிக்குமாருக்கு 50 லட்சமும் மற்ற கலை இயக்குனர்கள் கலைஞர் என நாலு கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தியேட்டர் ரைட்ஸ் 34.33 கோடிக்கு விற்க்கப்பட்டுள்ளது. 95 கோடி பட்ஜெட்டில் எடுத்துக் கொடுத்த அயலான் திரைப்படத்தின் பிசினஸ் 86.75 கோடியாக இருக்க தயாரிப்பாளர்களுக்கு 8.75 கோடி நஷ்டம் தான் கிடைத்துள்ளது தமிழில் மட்டும் சேட்டிலைட் விற்கப்பட்டுள்ளதால் மற்ற மொழி விற்றால் தயாரிப்பதற்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிஸ்மி கூறியுள்ளார்.

அதேபோல் தமிழ்நாட்டில் அயலான் படம் மொத்தம் 55 கோடியில் தயாரிப்பாளருக்கு கிடைத்த ஷேர் மற்றும் 26 கோடி கிடைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் விநியோகஸ்தருக்கு 34.3 கோடி விற்கப்பட்டுள்ள நிலையில் 26 கோடி மட்டுமே ஷேர் கிடைத்துள்ளது இதனால் 8 புள்ளி 33 கோடி விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் தான்.

ரம்பா என்னப்பா ரம்பா பிக் பாஸ் ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..

அதேபோல் கேரளாவில் 72.6 லட்சம் வசூல் பெற்று 33.95 லட்சம் மட்டுமே ஷேர் கிடைத்துள்ளது அதன்படி கேரளா வினியோகஸ்தர் 66 லட்சம் நஷ்டம் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது மொத்தத்தில் உலக அளவில் அயலான் திரைப்படம் வெற்றி பெறாத திரைப்படமாக மாறி உள்ளது.

அயலான் திரைப்படம் வெற்றி பெறாததற்கு காரணம் சிவகார்த்திகேயன் மீது சுமத்தப்பட்ட கெட்ட பெயர் தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதே போல் இந்த மொத்த கடனும் சிவகார்த்திகேயன் தலையில் விடிந்ததால் அவருக்கு மட்டுமே மிகப் பெரிய நஷ்டமாக கருதப்படுகிறது என பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.