சத்யா செய்த தவறு.. முத்துவிடம் சிக்கிய CCTV ஆதாரம்.! மீனாவை வீட்டை விட்டு அனுப்ப முடிவு செய்த விஜயா.?

siragadikka aasai tomorrow episode :  சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை மஸ்கிட்டோ ஸ்ப்ரே அடித்ததால் ஒத்துக்காமல் மூச்சு திணறி கீழே விழுகிறார் அவரை அழைத்துச் சென்று மீனா ஹாஸ்பிடலில் சேர்க்கிறார். ஒரு வழியாக அண்ணாமலை உடல் நலம் சரியாகி மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.

வீட்டிற்கு வந்தவுடன் மஸ்கட் ஸ்ப்ரே யார் அடித்தது என பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது அப்பொழுது சுருதி சின்ன பிரச்சனை தானா அதனால்தான் சீக்கிரம் வந்துட்டீங்களா என பேச உடனே முத்து அப்ப பெருசா ஏதாவது நடக்கணும்னு எதிர்பார்த்தியா என ஸ்ருதியை திட்டுகிறார் முத்து.

சூப்பர் ஸ்டாருக்கே தண்ணி காட்டிய மணிகண்டன்.! லவ்வர்ஸ் இடம் அடிபணிந்த லால் சலாம்.. இரண்டாவது நாள் வசூல் விவரம் இதோ.

இப்ப எதுக்கு என்ன திட்டிட்டு இருக்கீங்க ஹாஸ்பிடல்ல செலவாயிடுச்சுன்னு தானே இவ்வளவு திட்டி திட்டுறீங்க எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க நான் பணத்தை கொடுத்துடறேன் என பேச அதற்கு முத்து பண திமிர காட்டுகிறார் உடனே மீனா சென்று அமைதியா இருங்க என கூற பிறகு முத்து அமைதியாக இருக்கிறார்.

அதேபோல் சுருதி மிகவும் கோபத்துடன் இருக்க அப்பொழுது ரவி ஒரு சாரி கேக்கணும்னு கூட உனக்கு தோணல அதான் நீ தப்பு செஞ்சத என்னைக்குமே நீ ஒத்துக்க மாட்ட என ரவி கூற  உடனே ஸ்ருதி அண்ணாமலை இடம் சென்று சாரி அங்கிள் என கூறிவிட்டு வருகிறார் ஏதோ கடமைக்கு சொன்னது போல் சொல்லிட்டு வந்த இது எனக்கே தெரியுது என ரவி சுருதியை திட்டுகிறார்.

மற்றொரு பக்கம் விஜயா நீங்க அழைத்து கொண்டு வந்த வந்த மருமக சரியில்ல நான் அழைத்து கொண்டு வந்த மருமகளா பாரு சாரி கேட்டுட்டு போற என்னைக்கு கூட நான் அழைச்சிட்டு வந்த மருமக அவ ரூம எனக்கு கொடுத்துட்டா அவ மனச நீ என்னைக்கு தான் புரிஞ்சுக்க போறியோ என மீனாவை பற்றி அண்ணாமலை பேசுகிறார்.

தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டும் மரண ஹிட் கொடுத்து காம்பேக் கொடுத்த டாப் 5 நடிகர்கள்.!

இந்த நிலையில் நாளைய எபிசோடு ப்ரோமோவில் சத்தியா விஜயாவை பழிவாங்க பணத்தை திருடியது சிசிடிவி கேமராவில் ரெக்கார்டு ஆகிவிட்டது அதனை முத்துவின் நண்பன் போட்டு காமிக்கிறார் முதலில் ஆள் அடையாளம் தெரியவில்லை என கூறிய முத்து பிறகு இன்னொரு சிசிடிவி கேமராவை போட்டு காட்ட அதில் சத்யா மற்றும் சிட்டி இருவரும் ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு விஜயாவிடம் பணத்தை பறித்தது தெரிகிறது.

இதனால் முத்து மிகவும் கோபமாக இருக்கிறார் இப்பொழுது வீட்டிற்கு சென்று மீனாவை திட்டி வழக்கம்போல் சண்டை போடுவாரா அல்லது சத்யாவிடம் சென்று ஏன் இப்படி செய்தாய் என கேட்கப் போகிறாரா என்பது தெரியவில்லை ஆனால் இது விஜயாவுக்கு தெரிந்தால் மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வசதியாக இருக்கும் இந்த நிலையில் நாளை எபிசோட் இன்னும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்