சூப்பர் ஸ்டாருக்கே தண்ணி காட்டிய மணிகண்டன்.! லவ்வர்ஸ் இடம் அடிபணிந்த லால் சலாம்.. இரண்டாவது நாள் வசூல் விவரம் இதோ.

Lover vs Lal Salaam 2nd Day Box office: மணிகண்டன் நடிப்பில் லவ்வர் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் என இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த இரண்டு படங்கள் இரண்டாவது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், அனந்திகா, செந்தில், தம்பி ராமையா, லிவிங் ஸ்டண்ட், கபில் தேவ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் அதிக பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

விவாகரத்து செய்தாலும் இனி இரண்டாவது திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் 4 நடிகர்கள்.!

பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் திரைப்படம் வெளியான நிலையில் இதற்கு போட்டியாக மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா இணைந்து நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி இருப்பதனால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களிடம் பலரும் தியேட்டருக்கு ஆர்வமுடன் வந்து பார்த்து வருகிறார்.

லவ்வர் படம் மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாகும் அதன்படி மணிகண்டன் நடிப்பில் உருவான லவ்வர் முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூலை பெற்றது. தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களால் இரண்டாவது நாள் 3 கோடியாக வசூல் அதிகரித்துள்ளது. மொத்தமாக தற்பொழுது 3 கோடி வசூலை லவ்வர்ஸ் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

சரஸ்வதியை காப்பாற்ற கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழ்.! மேக்னா கொலைக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா அர்ஜுன் கேள்வி எழுப்பிய ராகினி.!

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மேலும் 2 கோடி அதிகரித்து மொத்தம் 5 கோடியை லவ்வர் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் 4.3 கோடியாக இருந்த நிலையில் 3வது நாளில் 3 கோடி ரூபாயாக வசூல் குறைந்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்