தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டும் மரண ஹிட் கொடுத்து காம்பேக் கொடுத்த டாப் 5 நடிகர்கள்.!

Tamil Actors: என்னதான் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தாலும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தரவில்லை என்றால் சினிமாவை விட்டு விலக வேண்டியது தான் இந்த சூழலில் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை வெற்றி படங்களை தராமல் இருந்து பிறகு கம்பேக் கொடுத்து தற்பொழுது தெறிக்கவிடும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

சிம்பு: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தவர் தான் சிம்பு. இந்த சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து தற்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சத்தமே இல்லாமல் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் அப்டேட்டை சொன்ன சூப்பர் ஸ்டார்.. குஷியில் ரஜினி ரசிகர்கள்..

சூர்யா: சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹிட் படங்கள் கொடுக்க முடியாமல் இருந்து வந்த சூர்யா சூரரைப் போற்று படத்தின் மூலம் மரண கம்பேக் கொடுத்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

விஜய்: தளபதி விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு போக்கிரி திரைப்படம் வெளியானது இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை சந்தித்தது. இந்த சூழலில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி படத்தின் மூலம் வெற்றினை தந்தார்.

அஜித்: 2007ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் பில்லா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து 2011ஆம் ஆண்டு மங்காத்தா என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அட நம்ம ஷெரினா இது.. 18 வயது இளம் பெண்ணை போல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

கமல்ஹாசன்: கமல்ஹாசன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தோல்வினை சந்தித்ததால் இவர் அவ்வளவுதான் என முடிவு செய்தனர். இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றினை கொடுத்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்