கார் போன விஷயத்தை அப்பாவிடம் மறைத்து வேறு வேலை தேடும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode november 13 : இன்றைய எபிசோடில் முத்து தல தீபாவளி கொண்டாட மாமியார் வீட்டிற்கு சென்று இருக்கிறார் அங்கு இந்திரா முத்துவிற்கு மோதிரம் போட சொல்லி சத்யாவிடம் கொடுக்கிறார் பிறகு முத்து இதெல்லாம் எதுக்கு எனக்கு தேவையில்லை சீதாவோட கல்யாணத்துக்கு தேவைப்படும் வச்சுக்கோங்க அத்தை என்று சொல்கிறார்.

ஆனால் இந்திரா அதெல்லாம் முறை மாப்பிளை செஞ்சாகணும் என்று இந்திரா சொல்வதும் அப்படி நகை போடணுன்னா உங்க பொண்ணு மீனாவுக்கு போடுங்க எனக்கு  வேணாம். அவங்க தான் காதலிக்கிறவங்க எல்லாத்தையும் சேர்த்து வச்சு சாதனை பண்ணி இருக்காங்க என்று நக்கல் செய்கிறார்கள்.

கோடீஸ்வரியை நடுரோட்டில் வைத்து அசிங்கப்படுத்திய சேட்டு.. ஐஸ்வர்யா சாப்பிடுவதை பார்த்து கடுப்பான பாட்டி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

பிறகு முத்துவும், சத்யாவும் சேர்ந்து தீபாவளியை வெடி வெடித்துக் கொண்டாடுகின்றனர் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் முத்துவிடம் வந்து பேசுகின்றனர்.. அடுத்து தல தீபாவளி முடித்துவிட்டு மீண்டும் முத்து வீட்டிற்கு வந்துள்ளார் அங்கு அண்ணாமலை என்ன ஆட்டோல வரீங்க போகும் போது கார்ல போனீங்களே என்று கேட்க அதெல்லாம் கார் இருக்கு நீங்க வாங்கப்பா சொல்றேன் என உள்ளே போகின்றனர்.

அப்பொழுது விஜயா முத்துவை பார்த்து என்ன தல தீபாவளிக்கு எல்லாம் போயிட்டு வந்தாச்சா கழுத்துல கையில எல்லாம் செயின் மோதரத்த காணுமே என்று பார்க்கிறார் உடனே முத்துவும் மனோஜ் கழுத்தில் கையில் பார்த்துவிட்டு என்ன இவன் கழுத்துலையும் ஒன்னும் காணோம் மலேசியாவில் இருந்து ஒன்னும் பார்சல் வரலையா என்று கேட்கிறார்.

இப்ப சொல்றேன்.. கேப்டனுக்கு அடுத்து இவர்தான்.! அரசியலில் இறங்கினால் சிஎம் ஆகலாம் – மீசை ராஜேந்திரன் பேச்சு

பிறகு முத்து அத்தை எனக்கு ஜெயின் மோதிரம் எல்லாம் போட்டாங்க நான் தான் அவங்க பசங்க செலவுக்கு இருக்கட்டும் என்று வேணாம் என சொல்லிவிட்டேன் என சொல்கிறார்.. இதை கேட்ட அண்ணாமலையும் நல்ல விஷயம் பண்ணி இருக்க என்று பெருமைப்படுகிறார்.

திரும்பவும் கார் எங்க என்று கேட்க பைனான்சியரோட பொண்ணு ஊருக்கு வந்து இருக்கு அதனால கார வாங்கிட்டு பொண்ண கூட்டிட்டு ஒரு வாரம் டூர் போய் இருக்காரு என்று சொல்வதும் உடனே விஜயா அப்ப ஒரு வாரத்துக்கு வருமானம் வராதா வீட்ல நிறைய செலவு எல்லாம் இருக்கு என்று சொல்வது உடனே ரோகிணி என்னோட ஷேர நான் தரேன் என்று ரூமில் இருந்து பணம் எடுத்து வந்து விஜயா கையில் கொடுக்கிறார்.

உடனே விஜயா மனோஜும் சம்பள பணத்தை என்கிட்ட கொடுத்துட்டான் என்று சொல்கிறார் இப்ப முத்து மட்டும் தான் பணம் தரல ஒன்னோட பொண்டாட்டியும் வீட்ல சும்மா தான் இருக்கா, அதனால ஒங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து நீ தான் பணம் தரணும் என்று விஜயா சொல்ல அண்ணாமலை ஒரு வாரம் தானே அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் அப்புறமா வேலைக்கு போய் பணம் தருவான் என்ன சொல்கிறார்..

அடுத்து முத்து வேலை தேடி ஒரு டிராவல்ஸ்க்கு போயி கார் கேட்க அந்த ஓனர் என்ன முத்து பைனான்சியர அவங்க ஆளுங்க முன்னாடியே அடிக்க பார்த்திருக்க அதனால் அவர் எல்லா டிராவல்ஸும் போன் பண்ணி முத்துக்கு வேலை தரக்கூடாதுன்னு சொல்லி இருக்காரு அவர பகச்சிகிட்டு எங்களால இருக்க முடியாது யூனியன்ல அவரு பெரிய ஆளு உனக்கு கார் இல்லப்பா என்று சொல்லிவிட்டார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.