ஸ்ருதி முன்னாடி மீனாவை ஒரு வேலைக்காரி போல வேலை வாங்கும் விஜயா.. யோவ் இயக்குனர் இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு கொந்தளிக்கும் ரசிகர்கள்

Siragadikka Aasai today episode december 5 : சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ஸ்ருதியை விளக்கேற்ற சொல்கின்றனர் அப்போது தீப்பெட்டி பத்த வில்லை எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்று சொல்ல பிறகு விஜயா பத்த வைத்து விளக்கு ஏத்த கொடுக்கிறார்.. அடுத்து ரவியிடம் பாலும் பழமும் கொடுத்து.

இதனை நீ சாப்பிட்டு ஸ்ருதி கிட்ட குடு என்று சொல்ல முதலில் பொண்டாட்டி சாப்பிட்டு அப்புறம் புருஷன் கிட்ட கொடுக்க கூடாதா என்று ஸ்ருதி முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு ரவிக்கு கொடுக்கிறார்.. அந்த நேரத்தில் பரசு வீட்டிற்கு வந்து ரவி ஸ்ருதி எப்படி இருக்கீங்க என்று கேட்கிறார்.

போலீஸ் ரெய்டில் சிக்கிய பூனைகண் நடிகை.. கோபத்தில் நயன்தாராவை கோத்து விட்ட சம்பவம்.!

பிறகு அண்ணாமலை நானும் பரசுவும் வெளிய போயிட்டு வரோம் சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் நீயே பார்த்துக்கோ என்று விஜயாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.. வெளிய வந்ததும் பரசு அண்ணாமலையிடம் உன்னோட மருமகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க..

இவங்களெல்லாம் விஜயாவ எப்படி சமாளிக்க போறாங்களோ என்று சொல்ல  அண்ணாமலை அவங்களையெல்லாம் விஜயா எப்படி சமாளிக்க போறாங்க என்பது தான் பெரிய விஷயம் எனக்கு மூணு மருமகளும் ஒன்னு தான் ஆனால் மீனா கிட்ட இருக்கிற குணம் மத்த ரெண்டு பேர் கிட்ட இருக்கான்னு தெரியல எது எப்படியோ எல்லார்கூடயும் எப்படி இருக்கிறது எனக்கு சந்தோஷம் தான் என்று சொல்கிறார்.

விஷ்ணு கேப்டன்சியில் முதல் நாளே பிக்பாஸ்.. ஸ்மால் பாஸ்.. வீட்டிற்கிடையே எழுந்த கலவரம்

அடுத்து விஜயா ரோகிணியை அழைத்து இதுதான் என்னோட மூத்த மருமகள் ரோகினி, நான் நெனச்ச மாதிரியே நீங்க ரெண்டு மருமகளுக்கு எனக்கு கிடைச்சு இருக்கீங்க ரோகினியோட அப்பாவும் மலேசியால பெரிய தொழில் அதிபர் நிறைய பைனான்ஸ் பிஸ்னஸ் பண்றாரு அங்கு ஒரு பெரிய டவர் இருக்கும்ல அதுவே ரோகினி ஓட அப்பாவுது தான் என விஜயா..

ரீல் விடுவதற்கு ஸ்ருதி இந்த மாதிரி எல்லாம் மலேசியால போய் சொல்லாதீங்க உங்கள புடிச்சு உள்ள வச்சுருவாங்க அது வேறயாருதோ என்று ஸ்ருதி சொல்கிறார்.. பிறகு ஸ்ருதிக்கு வீட்டை சுத்தி காண்பிக்கின்றனர்.. அடுத்து இவங்க ரெண்டு பேரும் தங்குவதற்கு ரூம் இல்லையே என்பதால் மீனாவிடம் உன்னோட ரூமை கிளீன் பண்ணிவை..

ரவி – ஸ்ருதி இங்க தான் தங்க போறாங்க நீ உன் வீட்ல கொஞ்சம் இடத்தில் தானே எல்லாரும் சேர்ந்து தூங்குனீங்க நீங்க வெளியே போய் படுத்துக்கோங்க இங்கதான் ஸ்ருதி இருக்க போறாங்க என்று சொல்ல மீனாவும் எதுவும் சொல்லாமல் சுத்தம் செய்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.