விஷ்ணு கேப்டன்சியில் முதல் நாளே பிக்பாஸ்.. ஸ்மால் பாஸ்.. வீட்டிற்கிடையே எழுந்த கலவரம்

BiggBoss 7 Promo : சின்ன திரையில் பிரம்மாண்ட பொருட்ச் செலவில் அரங்கேறி வரும் பிக் பாஸ் 7 யில் ஒவ்வொரு வாரமும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் தான் விஷ்ணு மற்றும் அர்ச்சனாவிற்கு இடையே பல வாக்குவாதங்கள் ஏற்பட்டு இருந்தன.

அதனை இறுதிவார எபிசோடில் கமலஹாசன் தான் பேசி புரிய வைத்தார்.. மேலும் நேற்றைய எபிசோடில் ஜோவிகா வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது .. அவர் இருந்த ஒன்பது வாரத்திற்கான சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினாராம்.. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் விஷ்ணு கேப்டன் ஆகியிருக்கிறார்.

அஜித்தை பல வருடங்களாக ஒதுக்கி வைத்திருக்கும் கமல் இதுதான் காரணமா.? உண்மையை உடைத்த பிரபலம்

அதனால் விஷ்ணு ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு விஜய் வருமா, அனன்யா, ரவீனா, நிக்சன், பூர்ணிமா, விக்ரம் போன்றோரை அனுப்பி இருக்கிறார்.. இந்த நேரத்தில் பிக் பாஸ் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் கேப்டன் விஷ்ணு கூல் சுரேஷ் அண்ணன ஸ்வைப் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..

யாரு நிக்கறதுக்கு ரெடியா இருக்கீங்க ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஒரு வாய்ப்பு என்று சொல்கிறார். பிறகு அர்ச்சனா எழுந்து ஏதோ சொல்ல வருகிறார் ஆனால் நிக்சன் நீங்க பேசுறது கேக்க மாட்டோம் உட்காருங்க என்று என்று சொல்ல அர்ச்சனா நீங்க கேப்டனா இருந்தீங்கல்ல அப்ப இதை சொல்லி இருந்தா கேட்டிருப்பேன் என்று பதிலுக்கு அர்ச்சனா சொல்கிறார்.

விருது விழாவில் விக்ரமை குத்தி காட்டி பேசிய அஜித்.! சியான் கொடுத்த பதிலடி

பிறகு கேப்டன் பேசும்போதும் நிக்சன் கவனிக்காததால் விஷ்ணுவும் கோபப்பட்டு நீங்க கைய எறக்குனு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பு என்று ஸ்மால் பாஸ் மற்றும் பிக் பாஸ் வீட்டிற்கு இடையே பெரிய சண்டை நடக்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன..