ஸ்ருதியை வைத்து அண்ணாமலையை பழி வாங்க திட்டம் போடும் சுதா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode december 1 : இன்றைய எபிசோடில் முத்து மீனாவை விச்சுவை கல்லால் அடித்து விரட்டிய அந்த இடத்திற்கு அழைத்திட்டு போய் இந்த செங்கல்லால் தானே அந்த சாதனையை நீ பண்ணுன.. சாதனை பண்ணவங்களுக்கு எல்லாம் ஷீல்டு ஏதாவது குடுப்பாங்கள அந்த மாதிரி நான் இந்த செங்கல்ல நெனச்சுக்கிறேன்.

இந்த செங்கல் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம் என்று சொல்லி முத்துவும் மீனாவும் செங்களுடன் காரில் வீட்டுக்குப் போகின்றனர்.. அடுத்து சுதா வாசுதேவனிடம் நான் இன்னைக்கு ஸ்ருதியை போய் பார்த்தேன் அங்க இந்த அண்ணாமலையோட பொண்டாட்டி எனக்கு சரிசமமா உக்காந்துகிட்டு சம்மதினு கூப்பிடுறா..

என்னால ஸ்ட்ரைக் கொடுக்க முடியும்.. நாலா நிக்சனுக்கு ரெட் கார்டே கொடுப்பேன்.! ரகசியங்களை போட்டு உடைக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள்

உங்ககிட்ட கைகட்டி வேலை பார்த்த அவன் இப்ப நமக்கு சம்பந்தி ஆகிவிட்டான் அந்த அண்ணாமலை நிம்மதியா இருக்க கூடாது ஸ்ருதியையும்  ரவியையும் நம்ப பக்கம் இழுத்துகிட்டு பையன பிரிஞ்சி அண்ணாமலை ரொம்ப கஷ்டப்படணும் அவன பழி வாங்கணும் அதுக்கு முதல் விஷயமா ஸ்ருதிய அவங்க வீட்டுக்கு அனுப்பனும் என்று சொல்ல..

வாசுதேவன் நீ ஏதாவது பண்ணிக்கோ நான் அண்ணாமலை வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்கிறார் அடுத்து ரோகிணி வீட்டிற்கு வந்து எங்கே நம்ம வீட்டு வாசலில் பிரஸ் மீடியா எல்லாம் இருப்பாங்கன்னு பார்த்தேன் என்று விஜயாவிடம் சொல்கிறார் உடனே விஜயா எதற்கு என்று கேட்க மீனாதான் பெரிய சாதனை பண்ணி இருக்காங்கல்ல..

கிடைக்கிற கேப்பில் கோல் அடிக்கும் அஜித்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்.!

இதுவரை அவங்க புருஷன் தான் அடிதடி சண்டை என்று போயிட்டு இருந்தாரு இப்ப மீனாவும் சேர்ந்து இப்படி பண்றாங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வருகின்றனர். அண்ணாமலை ரொம்ப பெரிய விஷயம் பண்ணியிருக்க என்று பாராட்டுகிறார்.. அடுத்து ரோகிணி ரவி பொண்டாட்டி இருக்கிற இடத்துக்கு மீனா எதுக்காக போனாங்க என்று கேட்க..

முத்து அந்த பக்கமா பூ கொடுக்க மீனா போன இடத்துல இந்த சம்பவம் நடந்தது அதனாலதான் காப்பாத்துனா என்று சொல்லி சமாளிக்கிறார். அடுத்து விஜயாவுக்கும் நிறைய பேர் போன் பண்ணி உங்க மருமக சாதன பண்ணி இருக்காங்க என்று பாராட்டுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..