என்னால ஸ்ட்ரைக் கொடுக்க முடியும்.. நாலா நிக்சனுக்கு ரெட் கார்டே கொடுப்பேன்.! ரகசியங்களை போட்டு உடைக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள்

Bigg Boss 7: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி 57 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் அர்ச்சனாவிற்கும், விசித்ராவுக்கும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு போட்டியாளர்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். அப்படி பூர்ணிமா, மாயா இருவரும் அடங்கிய நிலையில் தற்பொழுது விஷ்ணு ஆரம்பித்துள்ளார். தொடர்ந்த அர்ச்சனாவிடம் மாறி மாறி விஷ்ணு சண்டை போடும் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது.

அவங்கள ஹீரோயினா காண்பிக்க என்ன பகடைகாயா யூஸ் பண்றாங்க என்கிட்ட நடக்காது.. விஷ்ணுவை கடுப்பேத்தி பார்க்கும் அர்ச்சனா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

இந்நிலையில் இந்த வார கேப்டனாக இருக்கும் நிக்சன் மீது குற்றச்சாட்டு இருந்தால் அதனை சரியான காரணத்துடன் கூறி மூன்று முறை மணி அடிக்க வேண்டும் எனவும் அதனை ஹவுஸ் மேட்ஸ்கள் ஏற்றுக் கொண்டால் நிக்சன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு நேரடியாக எவிக்ஷனுக்கு செல்வார் எனவும் பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

அப்படி ஏற்கனவே தினேஷ் மற்றும் விஷ்ணு மணி அடித்த நிலையில் மூன்றாவதாக தற்பொழுது மாயாவும் நிக்சனுக்கு எதிராக மணி அடித்திருக்கிறார். இந்த சமயத்தில் ரவீனாவும் மணியும் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது ரவீனா என்னால மூன்று முறை நிக்சனுக்கு எதிராக ஸ்ட்ரைக் கொடுக்க முடியும் அதற்கு ஏற்ப என்னிடம் பாயிண்ட் இருக்கிறது என்று கூறுகிறார்.

பூர்ணிமாவிடம் பேச பயப்படுகிறாரா இந்துஜா? வைரலாகும் பதிவு..

இதற்கு மணி என்னால அவனுக்கு ரெட் கார்டே கொடுக்க முடியும் அந்த அளவுக்கு என்னிடம் பாயிண்ட்ஸ் இருக்கு அதை வெளியில வந்து சொல்றேன் அந்த அளவுக்கு நான் துடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். ஏற்கனவே கோர்ட் டாஸ்க் நடந்து முடிந்தவுடன் நிக்சனிடம் மணி என்னால எல்லாத்தையும் சொல்ல முடியும் சொன்னால் நீ மொத்தமா காலி என்று கூறியிருப்பார். எனவே மணிக்கும் நிக்சனுக்கும் ஏதோ நடந்திருப்பது மட்டும் தெரிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்