மீனாவை வேலைக்காரியை விட கேவலமாக நடத்தும் விஜயா.. முத்து செய்த தரமான சம்பவம்.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai today episode december 26 : இன்றைய எபிசோடில் ஸ்ருதி போனில் எனக்கெல்லாம் கொடும பண்ற மாமியாரா இருந்தா கத்தியாலே குத்தி இருப்பேன், நல்லவேளை நீங்க தப்பிச்சீங்க ஆன்ட்டி என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார். பிறகு மீனாவை வேகமாக கூப்பிட மீனாவும் கத்தியோடு வந்து நிற்க விஜயா ஒரு நிமிஷம் ஆடிப்போய் டிபன் ரெடி ஆயிடுச்சா என்று சாதுவாக கேட்கிறார்.

பிறகு ரோகிணி மீனாவிடம் எனக்கு இட்லி வேனாம் தோசை வேண்டும் என்று கேட்கிறார். அதேபோல் ஸ்ருதியும் எனக்கும் இட்லி வேணாம் ஆப் ஆயில் போட்டு தரீங்களா என்று கேட்க முத்து எழுந்து வந்து ஆப் ஆயில்தானே நான் போட்டு தரேன் என முட்டையை எடுத்து கீழே போட்டு விட்டார். பிறகு இது என்ன ஹோட்டலா மாறி மாறி மீனாவ வேலை விடுகிறீர்கள் என்று சொல்ல ஸ்ருதியும், ரோகிணியும் வெளிய போய் சாப்பிடுக்குறோம் என கோபமாக கிளம்பிவிட்டனர்.

மீனாவை வேலைக்காரியை விட கேவலமாக நடத்தும் விஜயா.. முத்து செய்த தரமான சம்பவம்.! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

பிறகு விஜயா ஏன்டா இப்படி பண்ண என்று முத்துவை திட்ட ஒரு நாள் சாப்பிடலனா ஒன்னும் ஆகிட மாட்டாங்க என்று சொல்லிவிட்டு முத்துவும் வேலைக்கு கிளம்பிவிட்டார். பிறகு விஜயா ஸ்ருதியும், ரோகினியும் வேலைக்கு போறாங்க நீ வீட்ல சும்மா தானே இருக்க இந்த வேலை செய்ய கூட உன்னால முடியலையா இப்ப பார கோச்சிக்கிட்டு சாப்பிடாம போயிட்டாங்க அதனால அவங்க வரும்போது அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சு வைக்கணும் நீ மார்க்கெட்டுக்கு போய் மீன் கறி எல்லாம் வாங்கிட்டு வா என்று மீனாவை அனுப்பி வைக்கிறார்..

மார்க்கெட்டுக்கு போற வழியில் மீனாவுடைய அம்மா அந்த பக்கமாக வந்ததும் எப்படி மீனா இருக்க என்று பேசிவிட்டு பிறகு வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறார்.. அங்கு சீதா, சத்தியா எல்லோரும் இருக்கின்றனர் அப்பொழுது உன்னுடைய தாலி செயின் எங்க மாப்பிள்ளை வாங்கி அடமானம் வச்சுட்டாரா அந்த அளவுக்கு என்ன கஷ்டம் என்று கேட்க மீனா அவர் எல்லாம் வாங்கி அடமானம் வைக்கலமா எங்க அத்தை நான் தான் நகை போட்டு கூட்டிட்டு வந்தேன்னு சொல்லி காமிச்சிட்டே இருந்தாங்க அதனால கழட்டி கொடுத்துட்டேன், என சொல்வதற்க்கு..

அட்ஜஸ்ட்மென்ட்க்கு மறுத்த சிரிப்பழகி.. பணத்திற்காக பெரும்புள்ளியுடன் அஜால் குஜால்.. போலீசிடம் சிக்கிய அவலம்…

மீனாவுடைய அம்மா நான் கொஞ்சம் சீட்டு பணம் சேர்த்து வச்சிருக்கேன் அந்த பணத்தை தர தாலி செயின் மட்டும் எடுத்து போட்டுக்கோ என்று சொல்ல எனக்கு அவர் நகை வாங்கி தரேன்னு சொல்லி இருக்காரு நீ சேர்த்து வைத்த பணத்தை சீதாவுக்கு நகை வாங்கி வச்சுக்கோ என்று சொல்கிறார்.. பிறகு மீனா அவங்க வீட்டிற்கு வந்ததும் மார்க்கெட்டுக்கு போக இவ்வளவு நேரமா எங்க போய் ஊர் சுத்திட்டு வர என்று விஜயா கேட்கிறார். நான் வெளியே போனாவே ஊர் சுத்தறதா அர்த்தமா நீங்க சொன்னதெல்லாம் ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி வாங்க லேட் ஆயிடுச்சு என்று சொல்ல..

சரி போ எல்லாரும் வேலை முடிஞ்சு டயடா வீட்டுக்கு வருவாங்க அவங்களுக்கு புடிச்சதெல்லாம் செஞ்சு வைக்கணும் ரோகிணிக்கு மீன் குழம்பு பிடிக்கும் அதை செஞ்சு வச்சுரு, ஸ்ருதிக்கு சிக்கன் சூப் செஞ்சிரு, அப்புறம் மனோஜ் ரவிக்கு சிக்கன் குழம்பு வச்சிடு, எனக்கும் அவருக்கும் கீரை கடைஞ்சிடு என்று பெரிய லிஸ்ட்டே சொல்கிறார் இதனை மீனாவும் சரி என்று செய்து கொண்டிருக்கிறார். அடுத்து ரவி ஸ்ருதியை பிக்கப் பண்ண ஸ்டுடியோக்கு போகிறார் அப்பொழுது டெய்லி இப்படி நீ வந்து என்ன அழைச்சிட்டு போக லேட் ஆகுது பேசாம நம்ம ஒரு கார் வாங்கிடலாம், உங்க அண்ணன் கார் ஷோ ரூம்ல தானா வேலை செய்யறாரு அங்க போய் கார் பார்க்கலாம் என்று சொல்கிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..