இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்..

This week Movie: வாரம் தோறும் திரையரங்குகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் தியேட்டரில் எத்தனை படங்கள் வெளியாகப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் சிறிய பட்ச திரைப்படங்களும் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் டிசம்பர் 29ஆம் தேதி தொடர்ந்து புதிய இயக்குனர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகிறது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: ரமேஷ் வெங்கட் எழுதிய ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் விஜயகுமார், ஹரிஜா, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர், யாஷிகா ஆனந்த் ஆகியோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். திகில் படமாக உருவாகியிருக்கும் இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 29 தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

ரூட் நம்பர் 17: பிரபல நடிகர் ஜீவாவின் சகோதரரும், ஆர்.பி சவுத்ரியின் மகனுமான பிக் பாஸ் ஜித்தன் ரமேஷ் ரூட் நம்பர் 17 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் அபிலாஷ் ஸ்ரீதேவன் இயக்க வெள்ளிக்கிழமை டிசம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

அட்ஜஸ்ட்மென்ட்க்கு மறுத்த சிரிப்பழகி.. பணத்திற்காக பெரும்புள்ளியுடன் அஜால் குஜால்.. போலீசிடம் சிக்கிய அவலம்…

மூத்தகுடி: இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் திஸ் ஃபார் பிளான்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடித்திருக்கும் மூத்தகுடி திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

Devil – The British secret agent: டெவில் தி பிரிட்டிஷ் சிகரெட் ஏஜென்ட் என்ற படம் தெலுங்கில் வெளியாகிறது இப்படத்தை இரவின் மேடாரம் இயக்க நந்தமுரி, கல்யாண் ராம், சம்யுக்தா மேனன், சத்யா அக்கலா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

மாயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறேன் என கேள்வி கேட்டு மூக்கை உடைத்துக் கொண்ட அர்ச்சனா.. சூனியக்காரின்னா சும்மாவா உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை..

பப்பில்கம்: தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் பப்பில்கம் படத்தில் தெலுங்கு நடிகை மானசா சவுத்ரி ஹீரோயின் ஆக நடிக்க அனுஹாசன், பிந்து சௌந்தர்யா அவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குயில் எலிசபெத்: மலையாளத்தில் உருவாகி இருக்கும் குயின் எலிசபெத் படத்தை பிரபல மலையாள இயக்குனர் பத்மகுமார் இயக்க நரேன், மீரா, ஸ்வேதா மேனன், ரமேஷ் பிஷாரடி, ஆர்யா ஸ்ருதி ரஜினிகாந்த், சானியா பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் இப்படம் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.