மனோஜின் 27 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போன காதலி ரீ என்ட்ரி.. சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்

Siragadikka aasai serial
Siragadikka aasai serial

Siragadikka aasai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை அறிமுகமான காலகட்டத்தில் இருந்து விறுவிறுப்பான கதை அம்சத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜாக நடித்து வரும் நடிகர் ஸ்ரீதேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது மனோஜிடம் இருந்து 27 இலட்சம் பணத்தை திருடிக் கொண்டு ஓடிப்போன காதலி மீண்டும் வந்திருக்கிறார். அவரோடு ரீல்ஸ் வீடியோவை நடிகர் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே மனோஜ் வேலைக்கு போவதாக கூறிவிட்டு ஏமாற்றி உட்கொண்டிருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது.

லிப்லாக் காட்சிக்கு இந்த நடிகர் ஓகே.. கோலிவுட் நடிகர்கள் நோ.. பிரியா பவானி சங்கர் பேட்டி

இது ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கும் தெரிய பிறகு ரோகிணி வற்புறுத்தி மனோஜ் ஹோட்டலில் வேலை செய்ய வைக்கிறார். ஆனாலும் அங்கேயும் வேலை செய்ய முடியாமல் வேலையை விட்டு விடுகிறார் மனோஜ். மேலும் தனது பார்க் நண்பரிடம் மனோஜ் கடன் வாங்கிய நிலையில் அவர் வீட்டிற்கு வந்து மிரட்டி விட்டு சென்றார் இது ரோகினிக்கும் தெரிய வந்துள்ளது.

இதனால் கனடா போக வேண்டும் என வீட்டில் இருப்பவர்களிடம் மனோஜ் தொடர்ந்து பணம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்பொழுது மனோஜின் முன்னாள் காதலி சீரியலில் என்ட்ரீ கொடுக்க உள்ளார். இதனால் கதைக்களம் மேலும் சுவாரசியமாக மாறவுள்ளது.

லிப்லாக் காட்சிக்கு இந்த நடிகர் ஓகே.. கோலிவுட் நடிகர்கள் நோ.. பிரியா பவானி சங்கர் பேட்டி

இதனை அடுத்து ஏற்கனவே முத்து மீனாவை பிரிக்க வேண்டும் என சிட்டி ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறார் விஜயா ஒரு பக்கம் பிளான் போட தற்பொழுது ஜீவா அறிமுகமாக இருப்பதால் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் சிறகடிக்க ஆசை சீரியல் அமைந்துள்ளது.