கதையை லாக் செய்த விஜயகாந்த்.. சண்முகபாண்டியன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட்..!

shunmaga pandian next movie padai thalaivan new update: கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இவருடைய அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜயகாந்த் மறைவிற்கு முன்பு படம் குறித்து கதை கேட்டு ஓகே சொன்னதாகவும் சில படப்பிடிப்புகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் சண்முக பாண்டியன் சகாப்தம், மதுரை வீரன் முழு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைய இருப்பதாகவும் இன்னும் மீதம் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படை தலைவன் படத்தின் கதையை விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது ஓகே சொன்னதாகவும் அதன் பிறகு தான் சண்முக பாண்டியன் படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு விஜயகாந்த் படத்திற்கு இணையாக இப்படத்தில் சண்டைக் காட்சிகள் நடைபெற்ற வருகிறதாம். மொத்தம் ஐந்து சண்டை காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இவ்வாறு இவர் நடித்து வரும் படங்கள் வெற்றி பெற்றால் அடுத்தடுத்த படங்களில் சண்முக பாண்டியன் நடிக்க இருக்கிறார்.

shunmaga pandian next movie padai thalaivan new update
shunmaga pandian next movie padai thalaivan new update

படை தலைவன் படம் வருகின்ற 14ஆம் தேதியை ரிலீஸ் செய்ய படக் குழுவினர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தை இயக்கிய அன்பு படை தலைவன் படத்தினை இயக்க பார்த்திபன் திரைக்கதை வசனத்தை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.