லிப்லாக் காட்சிக்கு இந்த நடிகர் ஓகே.. கோலிவுட் நடிகர்கள் நோ.. பிரியா பவானி சங்கர் பேட்டி

actress Priya Bhavani Shankar Interview: விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தனது முதல் சீரியலிலேயே பிரபலமான இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது அப்படியே வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்து வந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அப்படி தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதையை லாக் செய்த விஜயகாந்த்.. சண்முகபாண்டியன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட்..!

அந்த வகையில் தற்பொழுது இந்தியன் 2, டிமாண்டிக் காலணி 2, ரத்னம், ஜெப்ரா, பீமா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து மேலும் பல வருடங்களாக காதலித்து வந்த ராஜவேல் என்பவர் உடன் அடிக்கடி ரொமான்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ஆக்டிவாக உள்ளார்.

இவ்வாறு இதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் லிப்லாக் காட்சிகள் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியும் ஆனால் முடியாது என அடம் பிடித்து அந்த காட்சியில் நடிக்க மறுத்தாராம். முக்கியமாக எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை படத்தில் நடித்த லிப் லாக் காட்சி குறித்து தெளிவாக பேட்டி அளித்திருந்தார்.

புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா.? அட நம்ப ரஜினி பட நடிகை தானா..

இந்த சூழலில் இவர் தற்போது அளித்திருக்கும் பெட்டியில் கதைக்காக அமையும் லிப்லாக் காட்சிகளை யாருடன் நடிக்க சம்மதிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் யோசித்த பின் சிரித்தபடியே எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லு அர்ஜுனுடன் தான் அப்படி நடிப்பேன். சினிமாவில் தேவைப்படும் ரொமான்ஸ் காட்சிகள் என்றால் அவருடன் லிப்லாக் காட்சியில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். பல தமிழ் நடிகர்களுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க மறுத்த பிரியா பவானி சங்கர் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.