புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா.? அட நம்ப ரஜினி பட நடிகை தானா..

Rajinikanth: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது சினிமாவில் ஜொலித்து வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளார்கள் அப்படி ரஜினிகாந்த் படத்தில் நடித்த பிரபல நடிகையின் குழந்தை வயது புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை பாலிவுட் பிரபலமான தீபிகா படுகோன் தான்.

இன்றைய தேதியில் இந்தியாவின் டாப் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் தமிழில் 2014ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

பாலிவுட்டில் அதிகபட்சத்தில் உருவாகும் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவர் கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்த ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

 deepika padukone
deepika padukone

இப்படம் ரூபாய் 1350 கோடி வர வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் ஜவான் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே வரும் தீபிகா படுகோனின் கேரக்டர் தான் அதிக அளவில் பேசப்பட்டது. இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் தீபிகா படுகோன் ஹிந்தி சினிமாவின் முன்னணி ஹீரோவா ரன்வீர் சிங்கை திருமணம் செய்துக் கொண்டார்.

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து போல்டான கேரக்டரில் நடித்து வரும் தீபிகா கடைசியாக ரித்திக் ரோஷன் உடன் இணைந்து ஃபைட்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தற்பொழுது தீபிகா படுகோனின் குழந்தை பருவ புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 deepika padukone
deepika padukone