சிறகடிக்க ஆசை முத்துவுக்கு கிடைத்த பட வாய்ப்பு.! அப்போ சீரியலின் நிலைமை அவ்வளவு தானா இதோ அவரே கூறிய தகவல்..

 Siragadikka aasai serial actor: தற்பொழுதெல்லாம் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகும் ஏராளமான பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தொடர்ந்து வெள்ளித்திரையில் ஹீரோ ஹீரோயின்களாக கலக்கி வருகிறார்கள். அப்படி தற்பொழுது சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வந்த நடிகருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை மையமாக வைத்து சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பிளும் முதலிடத்தை பிடித்துள்ளது.

சிக்கிய கலிவரதன் மாட்டிய ஆதாரம்… டார்ச்சர் செய்ததால் ஜெயில் வார்டன் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய சரஸ்வதி… தொக்கா பிடிக்கப் போகும் தமிழ்..

300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வரும் ஹீரோவின் உண்மையான பெயர் வெற்றி வசந்த். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவிற்கு வந்திருந்தார் அதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்பொழுது வெற்றிச்செல்வன் கூடிய விரைவில் என்னை பெரிய திரையிலும் பார்க்கப் போகிறீர்கள் அதற்கு உங்களுடைய பேர் ஆதரவு எனக்கு வேண்டும் என்று சொல்லி இருந்தார். மேலும் ஏற்கனவே நான் சில வெப் சீரிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன் மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன் கூடிய விரைவில் அதை அனைத்தையும் நீங்கள் பார்க்கும் நேரம் வந்துவிடும் என தெரிவித்தார்.

மாமா என்று கூட பார்க்காமல் சட்டையை பிடித்த சத்தியா கையை உடைத்துவிட்ட முத்து.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

அப்பொழுது ரசிகர் ஒருவர் அப்படி நீங்கள் வெள்ளித்திரையில் பிஸியாகிவிட்டால் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பீர்களா என்று கேட்டவுடன் அதற்கு முத்து எனக்கு எவ்வளவு படங்கள், பெரிய பெரிய வாய்ப்புகள் வந்தாலும் அது என்னுடைய பார்ட் டைம் வேலையாக தான் இருக்கும் எந்த காரணத்திற்காகவும் சீரியலில் இருந்து விலக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்