மீனாவை சமையல்காரி போல் நடத்தும் குடும்பம்.. முத்து வாங்கிட்டு வந்த தந்தூரி சிக்கன் – சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

Siragadikka Aasai serial promo : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடுகளில் சுதா ஸ்ருதிக்காக 50 பவுன் நகை எடுத்து வந்து கொடுக்கிறார் இதை பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.. பிறகு சுதா மீனா எவ்வளவு நகை போட்டு வந்தாங்க என்று கேட்க விஜயா அவ எங்க நகை கொண்டு வந்தா அவளுக்கு நாங்க தான் நகை போட்டு கூட்டிட்டு வந்தோம் என்று நக்கலாக சொல்வதால்..

பிறகு மீனா எனக்கு உங்களோட நகை எதுவும் வேண்டாம் என்று தாலிச் செயின் குண்டு எல்லாத்தையும் கழட்டி கொடுத்து விட்டார்.. மேலும் மீனாவை அந்த வீட்டில் ஒரு சமையல்காரி போல் விஜயா நடத்தி வருகிறார். எல்லோருக்கும் என்னென்ன வேண்டும் என்று மீனா பார்த்து பார்த்து வேலை செய்து வருகிறார்.

13 நாள் நடித்து நிறுத்தப்பட்ட ரஜினி படம்.. அந்த இயக்குனரை வைத்து பிளாக்பஸ்டர் படம் கொடுத்த சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து மீனாவிடம் இன்னைக்கு என்ன சமைச்ச என்று கேட்க ஸ்ருதிக்கு சிக்கன் சூப் செஞ்சேன், அத்தை மாமாக்கு கீரை கடைந்தேன்,  உங்க அண்ணன் மற்றும் தம்பிக்கு சப்பாத்தி சிக்கன் கிரேவி செஞ்சேன் என்று சொல்கிறார்.

பிறகு முத்து உனக்கு என்ன செஞ்ச என்று கேட்க நான் வேலை செஞ்சேன் என்று மீனா சொல்கிறார்.. அதனால் முத்து வீட்டிற்கு தந்தூரி சிக்கன் வாங்கிட்டு வருகிறார். உடனே மனோஜ் நல்ல மசாலா வாசம் வருகிறது என்று சொல்ல முத்து நான் என் பொண்டாட்டிக்காக தந்தூரி சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கேன் என்று சொல்கிறார்..

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரம்.. 80 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உடனே விஜயா அண்ணாமலையிடம் இதெல்லாம் என்னங்க புது பழக்கம் என்று கேட்க இந்த வீட்ல அவங்க அவங்களுக்கு தேவையானது எல்லாம் கரெக்டா நடக்குது. மீனாவுக்கு என்ன வேணும்னு யாராவது கேட்டீங்களா அதனால தான் நான் மீனாவுக்கு புடிச்ச சிக்கன் தந்தூரி வாங்கிட்டு வந்து இருக்கேன் என்று மீனாவை கூட்டிகிட்டு ரூமுக்கு போய் மீனாவை சாப்பிட வைக்கும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.