பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரம்.. 80 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss 7 Saravana Vikram Salary: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ரவீனா, சரவணா விக்ரம் மற்றும் விசித்ரா மூன்று பேரும் நாமினேஷனில் சிக்கி உள்ளார்கள். இவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த வாரம் ஓடியது.

மேலும் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது இதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து அறிவுரை கூறி சென்றுள்ளனர். எனவே இதற்கு மேல் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் கடுமையான போட்டி நிலவி வருகிறது. எனவே இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியவில்லை அந்த அளவிற்கு டஃப் உள்ளது.

பிரசாந்த் இந்த நிலைமைக்கு காரணம் சத்யராஜ் தான்.! பலருக்கும் தெரியாத தகவல்…

கடைசி இரண்டு வாரங்களாக பெரிதாக சண்டை சச்சரவுகள் இல்லை என்றாலும் அதற்கு முன்பு போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டைகள் ரசிகர்களை பெரிதளவிலும் கடுப்பேற்றியது. எனவே இந்த சீசனை பார்த்தாலே மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறி வந்தனர் மேலும் கமல்ஹாசனை விமர்சித்ததையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் இந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்ற சரவணன் விக்ரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. சரவணன் விக்ரம் நல்ல எண்ணங்களுடன் இருந்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை.

நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்.. வீட்டில் நடந்த சம்பவம் – கண்ணீரில் திரைப்பிரபலங்கள்

அனைத்து இடங்களிலும் மிகவும் அமைதியாக இருந்ததை பார்க்க முடிந்தது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் சரவணா விக்ரம் ஒரு எபிசோடுக்கு ரூபாய் 18 ஆயிரம் என பேசப்பட்டதாம். மொத்தம் 80 நாட்கள் வெற்றிகரமாக பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.