நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்.. வீட்டில் நடந்த சம்பவம் – கண்ணீரில் திரைப்பிரபலங்கள்

Bondamani : திரை உலகில் நடிக்கும் ஹீரோ ஹீரோயினை தவிர மற்ற குணச்சித்திர காமெடி நடிகர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்தது கிடையாது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள் பல குணச்சித்திர நடிகைகள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அவர்களில் ஒருவர் போண்டாமணி..

இவர் வடிவேலு, செந்தில், கவுண்டமணி, விவேக் என பல காமெடி நடிகர்களுடன் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார். மொத்தமாக 170 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் இதுவரை பெரிதாக சொத்து சேர்த்ததே கிடையாது தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்கு ரொம்பவும் கஷ்டப்பட்டவர்.

கரடு முரடான பாலாவுக்கு பிடித்த நடிகை யார் தெரியுமா.? அட இவுங்கள யாருக்குதான் பிடிக்காது

இப்படிப்பட்ட போண்டா மணி அண்மையில் உடம்பு சரியில்லாமல் ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிறுநீரக மாற்று மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறினார். இதற்கு அவர் பல சினிமா பிரபலங்களிடம் உதவி கேட்டார் கமல் மற்றும் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே அவருக்கு உதவி செய்தனர்.

கடந்த ஒரு வருடமாக  வாரத்திற்கு இரண்டு நாள் ஓமந்தூர் மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ்  மட்டுமே செய்து வந்தார் சரியான காசு இல்லாததால் ஆபரேஷன் அவர் செய்யவில்லை இப்படியான நிலையில் திடீரென தன்னுடைய வீட்டில் மயங்கி விழுந்து உள்ளார் அவரை குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என அதிர்ச்சியான செய்தியை கூறினார்.

Ajith : டான்ஸ் மாஸ்டர்கள் முன்னாடி நான் ஒண்ணுமே இல்ல.. ஜாலி பண்ணிய அஜித்!

இதைக் கேட்ட திரை பிரபலங்கள், ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வருகின்றனர் வர முடியாதவர்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் ஒரு சிறந்த நடிகனை தமிழ் சினிமா இழந்து விட்டது என கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.