Ajith : டான்ஸ் மாஸ்டர்கள் முன்னாடி நான் ஒண்ணுமே இல்ல.. ஜாலி பண்ணிய அஜித்!

Ajith: நடிகர் அஜித்குமார் சினிமா ஆரம்பத்தில் மீடியாக்களை சந்திப்பது தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன், கலை நிகழ்ச்சி என அனைத்திலும் கலந்து கொண்டு வந்தார் திடீரென ஒரு கட்டத்தில் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தனக்கென ஒரு வட்டத்தை வரைந்து அதில் வாழ்ந்து வருகிறார்.

நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் போய் கொண்டு இருக்கிறது அஜித்துடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, ரெஜினா..

Salaar Movie : படத்துல ஒன்னும் இல்ல.. வெத்து பில்டப்.. சலார் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்

பிக்பாஸ் ஆரவ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் பெயரால் ஆகி வருகிறது. டான்ஸ்ர்ஸ் யூனியன்  கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளது அதில் மேடை ஏறினார் அஜித் அப்போது ரசிகர்கள் டான்ஸ் ஆட சொல்லி இருக்கிறார்கள்.

திடீரென டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம், அசோக் ராஜா ஆகியவர்கள் மேடை ஏறி அஜித்தை டான்ஸ் ஆட சொல்லியிருக்கிறார்கள் அஜித்தும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் இணங்க ரெண்டு ஸ்டெப் போட்டு இருந்தாலும் அதன் பிறகு அவரே ஒத்துக் கொண்டார்.

இமான் – சிவகார்த்திகேயன் பிரச்சனை.. ஆதாரத்தை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்

நான் வெட்டி பந்தா காட்ட விரும்பல  டான்ஸ்  மாஸ்டர்கள் முன்னாடி நான் ஆடினால் அந்த அளவுக்கு இருக்காது என கூறினார். பொதுவாக டாப் ஹீரோக்கள் மேடை ஏறினார் ஓவர் பந்தா காட்டுவார்கள்  ஆனால் அஜித் அது எதுவும் செய்யாமல் ஜாலி பண்ணினார். அந்த வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.