கரடு முரடான பாலாவுக்கு பிடித்த நடிகை யார் தெரியுமா.? அட இவுங்கள யாருக்குதான் பிடிக்காது

Director Bala: இயக்குனர் பாலா தனக்கு மிகவும் பிடித்த நடிகை குறித்து கூறியிருக்கும் நிலையில் யார் அந்த நடிகையென ரசிகர்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காமித்து வருகின்றனர் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக விளங்கி வரும் பாலா தொடர்ந்த பல ஹிட் திரைப்படங்களை தந்துள்ளார்.
மேலும் இவர் படம் என்றால் நடிகர், நடிகைகள் நடிக்க தயக்கம் காண்பித்து வருகின்றார்கள்.

பொதுவாக பாலா ஒரு ஷார்ட் ஒழுங்காக வரவில்லை என்றால் அதனை பலமுறை எடுப்பாராம் மேலும் ஒரு கட்டத்தில் கோபமடைந்து சிலரை கைநீட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது எனவே பாலா என்றாலே பலரும் தயக்கம் காண்பித்து வருகின்றனர். பாலா ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாக எடுக்க வேண்டும் என்று விரும்புபவர் அப்படி இயக்குனர் பாலாவின் படத்தில் நடித்த கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக வெற்றியை காண முடியும் என ஏராளமான நடிகர், நடிகைகள் நம்புகின்றனர்.

வீடியோ ஆதாரத்தை காட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்று நம்பர் நடிகையை விடிய விடிய செய்த டிஸ்கஸ்…

அந்த வகையில் உதாரணமாக பாலா படத்தில் நடித்த ஏராளமான பிரபலங்கள் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் பொதுவாக பாலா தனது படத்தில் நடிக்கக்கூடிய நடிகர், நடிகைகளை அவ்வளவாக சுலபமாக விட மாட்டார் கதை முதல் மேக்கப் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தயாரிக்க கூடியவர். இந்த கதாபாத்திரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொள்வார்.

இதன் காரணமாக பாலா படத்தில் நடிக்க ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் கஷ்டமாகத்தான் இருக்கும் ஏனென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தைகளால் கூட திட்டுவார். இவ்வாறு இவருடைய இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், தாரை தப்பட்டை, அவன் இவன் போன்ற திரைப்படங்களில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. எனவேதான் எந்தவிதமான ரிஸ்க் எடுத்தாலும் கொஞ்சம் கூட பயப்பட மாட்டார் பாலா.

சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலா கூறுகையில், நான் ஒரு சில கதாநாயகிகளிடம் தான் ஒர்க் பண்ணி இருக்கேன் நான் பணியாற்றிய கதாநாயகிகளில் ரொம்ப ரொம்ப ஹார்ட் வொர்க் என்றால் அது நடிகை வரலட்சுமி தான். ஒருமுறை வில்லன் கதாபாத்திரத்தில் வரலட்சுமி ஏறி மிதிப்பது போன்ற காட்சி அந்த வில்லன் நடிகர் கொஞ்சம் புதுசு. ஏறி மிதிக்கிற மாதிரி மிதிக்கணும் ஆனா நான் கொஞ்சம் ஷார்ட் சரியா வரணும்னு என்று கத்தியால் நிஜமாகவே ஏறி மிதித்து விட்டார்.

Ajith : டான்ஸ் மாஸ்டர்கள் முன்னாடி நான் ஒண்ணுமே இல்ல.. ஜாலி பண்ணிய அஜித்!

மிதித்ததற்குப் பிறகு ரெண்டு மூணு டேக் போயிட்டோம் ஆனால் முதல் முறை மிதித்தது போலவே வரலட்சுமி நெஞ்சின் மேல் எலும்பு கிராக்கி விட்டது ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு மூன்று நாள் கழித்த ஊருக்கு போய்விட்டு திரும்பி வரும்போது எனது மொபைலில் எக்ஸ்ரே ஒன்ற என்னிடம் காட்டினார் அதில் நெஞ்சின் மேல் எலும்பு கிராக்காகி இருந்தது தெரிந்தது.

நான் உடனே அவரைப் பார்த்தேன் இது என்ன சிஜியா என்று கேட்டதும் அவரின் முகம் முற்றிலுமாக வாடி போய்விட்டது நிஜமாகவே உடைஞ்சிடுச்சு சார் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் என்று கூறினார். அந்த அளவுக்கு நடிகை வரலட்சுமி ஒரு ஹார்ட்வொர்க்கர் என்று கூறியுள்ளார். தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி நடிப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரிதளவில் பேசப்பட்டது.