kgf பாகுபளியை விட மிரட்டலாக உருவாக இருக்கும் சிம்பு-48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

Simbu 48 Movie Poster: சிம்பு இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு 48 படத்தின் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது  மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் சிம்பு தற்பொழுது தேசிய பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் தனது 48வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில்  படமாக உருவாக இருக்கும் சிம்பு 48 படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை அப்படி சிம்பு 48 படத்தில் தீபிகா படுகோன் நடித்தால் தமிழில் இவருடைய இரண்டாவது படமாக அமையும்.

கலை கட்டிய ரோபோ சங்கர் வீடு.. இந்திராஜாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது வைரலாகும் புகைப்படங்கள்..

இதற்கு முன்பு கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சிம்பு தான் புதிய கெட்டபில் இருக்கும் ஸ்டைலான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் இதுதான் சிம்பு 48 படத்தின் புதிய லுக் என கூறப்படுகிறது.

இதனை அடுத்து கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரைப் படக் குழு அணுகி உள்ளதாகவும் சலார் படத்தின் வெளியீட்டில் ரவி பஸ்ரூர் பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு மேலும் சிம்புவின் 48 படத்தின் அதிகாரப்பூர்வமான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜுனுக்கு முன்பே மூன்று டாப் ஹீரோக்கள் முதல்வன் திரைப்படத்தை நிராகரித்துள்ளார்களா.? அட லிஸ்டில் இவரும் இருக்கிறாரா.

இந்த சூழலில் இன்று சிம்பு தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருவதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இவருடைய 41வது படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

Simbu 48 Movie Poster
Simbu 48 Movie Poster