கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ்.. லிஸ்டில் இணைந்த சுருதிஹாசன் வெளியான அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்…

Kamal Haasan: அதிகப்பொருட்ச அளவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து தயாரித்து வரும் நிலையில் தற்போது தனது மகள் ஸ்ருதிஹாசனை வைத்தும் பட தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எஸ்.கே 21, எஸ்.டி.ஆர் 48, தக்லைப் உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைன்னு கூப்பிட்டு கொலை பண்றதுக்கு நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல… மிரட்டலாக வெளியானது சைரன் ட்ரைலர்

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தலைவர் 171வது படத்திற்கு ஆக ஸ்கிரிப்ட் எழுதி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது. ரஜினி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் லோகேஷ்-ரஜினியின் கூட்டணியில் தலைவர் 171 பட சூட்டிங் நடைபெற உள்ளது.

Kamal Haasan
Kamal Haasan

இதற்குள் ஸ்ருதிஹாசன் லோகேஷ் இணைந்திருக்கும் நிலையில் இவர்களது கூட்டணியில் மியூசிக் ஆல்பம் உருவாகலாம் என கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன் பாடல் எழுதி, பாடி, நடனமாடி இருக்கும் இந்த மியூசிக் வீடியோவை லோகேஷ் கனகராஜ் இயக்குனர் எனவும் சொல்லப்படுகிறது.

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால.. கட்டி பிடித்து ரோமன்ஸ் பண்ணும் புது பொண்ணு மாப்பிளை முத்து மீனா.!

இந்த சூழலில் தற்பொழுது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் பணிபுரிய இருப்பதை மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இது குறித்த மேலும் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதிஹாசன் சமீப காலங்களாக தமிழில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அக்கடத்தேச படங்களில் நடித்து வருகிறார்.