சூப்பரா நடிக்கிறான், வளரட்டும்.. ரஜினிக்கு வழி விட்ட சிவாஜி.! எந்த படத்தில் தெரியுமா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அதன் பிறகு கே பாலச்சந்தர் பாரதிராஜா போன்ற திறமையான இயக்குனர்கள் படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படிப்பட்ட ரஜினிகாந்த் தன்னுடைய மூத்த நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி மீது அதிக மரியாதை வைத்திருந்தார். எம்ஜிஆர் உடன் ரஜினி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சிவாஜியுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார் அப்படி விடுதலை, படிக்காதவன், படையப்பா, நான் வாழ வைப்பேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கொழுக் மொழுன்னு இருந்ததால் விமர்சிக்கப்பட்ட 5 நடிகைகள்.. இது ஒத்து வராது என திருமணம் செய்து கொண்ட நடிகை

இதில் நான் வாழவைப்பேன் படத்தில் சிவாஜி தான் ஹீரோ இந்த படத்தில் ரஜினி 20 நிமிடம் நடித்திருப்பார் முதல் பாதியில் ரஜினி வர மாட்டார். இரண்டாவது பாதியில் 20 நிமிஷம் வருவார் இவரை சுற்றி தான் கதையை நகரும்.. இந்த படத்தில் ரஜினி மைக்கேல் கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தார் இவருடைய நடிப்பை பார்த்து சிவாஜி ரொம்ப ஆச்சரியப்பட்டாராம்.

ரஜினி நல்லா நடிச்சிருக்கான் இந்த படம் நிச்சயம் ரஜினிக்கு பேரையும் புகைழையும் வாங்கி தரும் என சொல்லி பேசிக் கொண்டிருந்தாராம். அந்த இயக்குனரின் தயாரிப்பாளரும் இந்த படத்தில் ரஜினிக்கு அதிக காட்சி இருக்கிறது. இதனால் சிவாஜி சார் கோபித்து கொள்ள போகிறார் என கிளைமேக்ஸ் காட்சியில் கொஞ்சம் சீனை குறைத்து விடலாம் என கூறி இருக்கிறார்கள்.

கமலஹாசன் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்கள்.! ஒவ்வொன்னும் நின்னு பெசுச்சி..

நடிகர் சிவாஜி சார் ஒரு சீன் கூட கட் பண்ண கூடாது என்ன எடுத்தோமோ அது அப்படியே வரவேண்டும் என கூறிவிட்டாராம் படமும் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதாம் இந்த படத்தின் மூலம் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர் என கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே சிவாஜி தான் என சொல்லப்படுகிறது.