கமலஹாசன் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்கள்.! ஒவ்வொன்னும் நின்னு பெசுச்சி..

Kamal Haasan : தமிழ் சினிமாவில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல கெட்டப்களில் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார் நடிகர் கமலஹாசன். அதே போல் அன்றிலிருந்து இன்று வரை பல தலைமுறை பார்வையாளர்கள் கமலஹாசனை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

ஆறு மொழிகளில் இதுவரை 230 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் 1960 ஆம் ஆண்டு ஏ பிம்சிங்கின் தமிழ் திரைப்படம் ஆன களத்தூர் கண்ணம்மாவில் தன்னுடைய திரை பயணத்தை ஆறு வயதில் குழந்தையாக நடிக்க அறிமுகமானார் அதேபோல் இளம் வயதிலேயே சினிமா உலகில் அவரது பயணம் தொடங்கப்பட்டது.

பிக் பாஸ் எடுத்துட்டு மாயா பாஸ் என வச்சுக்கலாம்.. பிரதீப்பை விட ஆவேசமாக இறங்கிய அர்ச்சனா

இப்படி நடித்து வந்த கமலஹாசன் ஒரு காலகட்டத்தில் படிப்பை முடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனாலும் ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் அதில் நடனம் ஆடி வந்தார் , கமலஹாசனை வாழ்க்கையில் தூக்கி வீட்ட பிரபலங்களில் கே. பாலஜந்திரன் அவர்களும் ஒருவர். அந்த வகையில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள், 1981 ஆம் ஆண்டு ஏக் துஜே கே லியா, 1986 ஆம் ஆண்டு விக்ரம் திரைப்படம், 1989 ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள், ஆகிய திரைப்படங்கள் கமல் திரைப்படத்தில் வெற்றியை நிலை நாட்ட உறுதுணையாக இருந்த திரைப்படங்கள்.

இதனை தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கன்னியாகுமரி, 1992, கமலஹாசனின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான மூன்றாம் பிறை 1982 ஆம் ஆண்டு வெளியானது, அதேபோல் 1982ல் சகலகலா வல்லவன் 1985 ஆம் ஆண்டு சாகர் ஆகிய திரைப்படங்களும் கமலஹாசன் திரைபயணத்தில் மிக முக்கிய திரைப்படம் தான்.

முதல் முறையாக மகாவை பாராட்டிய சூர்யா.. ஆஹா கல்யாணம் ப்ரோமோ

அதன் பிறகு 2000 ஆண்டு வெளியாகிய ஹேராம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2001 இல் ஆளவந்தான், 2003 ல் அன்பே சிவம், 2004 ல் விருமாண்டி, 2006  ல் வேட்டையாடு விளையாடு, 2008 ல் தசாவதாரம், 2013 ல் விஸ்வரூபம், 2022-ல் விக்ரம், ஆகிய திரைப்படங்கள் கமலஹாசனை வெற்றிக்கனியை ருசிக்க செய்தது இந்த அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் திரை வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக கொண்டாடப்படுகிறது. இன்று கமலஹாசன் தன்னுடைய 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அதற்காக அவரின் சிறந்த திரைப்படங்களின் தொகுப்பு தான் இது.