மாமா மேல அவ்வளவு லவ்வு.! விஜய் புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா போட்ட பதிவு.

Leo trisha : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது, படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடித்திருந்தார். மேலும் லியோ திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், சாண்டி மாஸ்டர், கௌதம் வாசு தேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

படம் வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் தான் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, அதுமட்டுமில்லாமல் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

இயக்குனராக வெற்றி கண்ட கமல்ஹாசன்.. இதுவரை இயக்கிய திரைப்படங்கள் எத்தனை தெரியுமா.?

லியோ திரைப்படம் இதுவரை 500 கோடிக்கு மேல் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக பட குழு வெற்றி விழாவை ஏற்பாடு செய்தது, இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள், அதேபோல் நடிகர் விஜய், த்ரிஷா என அனைவரும் கலந்து கொண்டார்கள். விஜய் இந்த வெற்றி விழாவில் குட்டி ஸ்டோரி சொல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் அவரும் குட்டி ஸ்டோரி சொன்னார்.

அது மட்டும் இல்லாமல் அப்பா சட்டைக்கி மகன் ஆசைப்படுவதில் என்ன தவறு என வில்லங்கமான வசனத்தை பேசி ஒட்டுமொத்த அரங்கையும் அதிர வைத்தார். விஜய் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளார் த்ரிஷா இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் ஏனென்றால் இதற்கு முன்பு விஜய் உடன் நடித்த திரிஷா பல வருடங்களுக்குப் பிறகுதான் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்.! வைரல் புகைப்படம்..

இந்த நிலையில் திரிஷா மற்றும் விஜய் இருவரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டார்கள் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை த்ரிஷா அவர்கள் தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்டு அளவு கடந்த காதல் போன்ற குறியீட்டை பயன்படுத்தி பகிர்ந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மாமா மீது அவ்வளவு லவ்வா என கமெண்ட் செய்து வருகிறார்கள்..