இயக்குனராக வெற்றி கண்ட கமல்ஹாசன்.. இதுவரை இயக்கிய திரைப்படங்கள் எத்தனை தெரியுமா.?

Kamal Haasan : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன். ஆறு வயதில் இருந்து 69 வயது வரை படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து கைவசம் இந்தியன் 2, thug life, கல்கி போன்ற படங்கள் வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட கமலஹாசன் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு படங்களை தயாரித்து வருகிறார்.  நடிகராக, தயாரிப்பாளராக கமலை  நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் அவர் பல படங்களை இயக்கி வெற்றி கொண்டிருக்கிறார்.

ஜோசியரை வைத்து ராகினியை ஏமாற்றிய அர்ஜுன்.! கையெழுத்து போடும் நேரத்தில் தடுத்து நிறுத்திய தமிழ்.! தமிழும் சரஸ்வதியும் பரபரப்பான எபிசோட்.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் 1988 ஆம் ஆண்டு சாட்சி 420 என்னும் படத்தை இயக்கி அசத்தினார் அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டு ஹேராம் என்னும் படத்தை இயக்கினார்.  இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஷாருக்கான், கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருப்பார் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அதனை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு இவரே இயக்கி நடித்த படம் விருமாண்டி . முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல், ரொமான்டிக் என அனைத்தும் இருந்ததால் ரசிகர்களும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் படம் சென்றடைந்தது. பெரிய ஹிட் அடித்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் சமயத்தில் பல பிரச்சனைகள் வந்தாலும், கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆனது. இதில் ஒரு உளவாளி  போல நடித்து இருப்பார்.

வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.. கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 5 படங்களின் வசூல் நிலவரம்

படத்தில் தன்னுடைய முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருந்தார். விஸ்வரூபம் ஹிட் அடித்ததால் விஸ்வரூபம் 2 பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது இந்த படத்தை கமல் இயக்கி நடித்திருந்தார் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. மருதநாயகம், சபாஷ் நாயுடு போன்ற படங்களை கமல் இயக்கினார் ஆனால் சில காரணங்களால் அந்த இரண்டு படங்களும் கைவிடப்பட்டது.