பாலிவுட் முதல் கோலிவுட் வரை கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்.! வைரல் புகைப்படம்..

Kamal Haasan Birthday Special: நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இதனை ஒட்டி சினிமா பிரபலங்கள் ஏராளமானவர்கள் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள் அது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை குவிந்து வருகிறது. மறுபுறம் இவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக படத்தின் அப்டேட்களும் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து கமலஹாசன் தனது நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி ஒன்றை தந்து அசத்தியுள்ளார்.

Kamal Haasan Birthday Special
Kamal Haasan Birthday Special

இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்படி பாலிவுட் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார். மேலும் நடிகர் கமலின் தீவிர ரசிகரும் நடிகருமான சூர்யாவும் மேலும் குஷ்பூ ஆசையாக கமலை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

Kamal Haasan Birthday Special
Kamal Haasan Birthday Special

ஏவிஎம் நிறுவனத்தின் தலைவர் சரவணன் கமலின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. கமலஹாசனை வைத்து பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan Birthday Special
Kamal Haasan Birthday Special

நடிகர் நரேன் மற்றும் விக்ரம் பிரபு போன்றவர்களும் கலந்து கொண்டனர். நரேன் தனது மகளுடன் வந்திருந்தார் பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் பார்த்திபன் எடுத்துக்கொண்ட செல்பியும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இவ்வாறு ஏராளமான பிரபலங்கள் கமல் ஹாசனின் பிறந்தநாள் பாட்டியில் கலந்துக் கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Kamal Haasan Birthday Special
Kamal Haasan Birthday Special

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்றிருந்த இளமை இதோ.. இதோ.. பாடலில் கமல் பயன்படுத்திய புல்லட் பைக் ரசிகர்களுக்காக பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Kamal Haasan Birthday Special
Kamal Haasan Birthday Special