கொழுக் மொழுன்னு இருந்ததால் விமர்சிக்கப்பட்ட 5 நடிகைகள்.. இது ஒத்து வராது என திருமணம் செய்து கொண்ட நடிகை

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் ஆரம்பத்தில் உடல் எடையை ஏற்றி பப்பாளி பழம் போல் தான் இருந்து வந்த வந்தனர் ஆனால் ஒரு கட்டத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டதால் பின் உடல் எடையை குறைத்துக் கொண்டு படங்களில் நடித்தனர் அப்படி விமர்சிக்கப்பட்ட 5 நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

கீர்த்தி சுரேஷ் : தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வரும் கீர்த்தி சுரேஷ் இப்போது ரசிகர்கள் கனவு கன்னியாகவும் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தில் நடிக்க வந்த போது உடல் எடையை ஏற்றி கொழுக் மொழுக்கென்று  இருந்தார். இதனால் அவர் பிக்னிக் உடை மற்றும் டைட்டான உடைகள் போட முடியாமல் பெரிதும் விமர்சிக்கப்பட்டார் ஒரு கட்டத்தில் அதிரடியாக உடல் எடையை குறைத்து பட வாய்ப்புகளை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறார்.

கமலஹாசன் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்கள்.! ஒவ்வொன்னும் நின்னு பெசுச்சி..

ஹன்சிகா மோத்வானி : மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற சமயங்களில் ஹன்சிகா ஊத்துக்குளி வெண்ணை போல் கொழு கொழுவேன்று இருந்தார். இதனால் அவர் பிக்னிக் டிரஸ் போன்ற உடைகளை அணிய முடியாததால் விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுக்க அவர் சினிமாவில் இருந்து சிறு லீவு எடுத்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடல்  எடையை குறைத்தார் அதன் பிறகு பிக்னிக் மற்றும் மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார் : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே பெரிய ஹிட் அடித்தது ஆனால் இந்த படத்தின் போது உடல் எடையை ஏற்றி இருந்தால் குட்டி தொப்பை வெளியே தெரிந்தது. பிறகு அதிரடியாக இவர் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டாலும் இவரால் உடல் எடை உடல் எடையை அதிகமாக குறைக்க முடியவில்லை.

முதல் முறையாக மகாவை பாராட்டிய சூர்யா.. ஆஹா கல்யாணம் ப்ரோமோ

நயன்தாரா :  தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயந்தாரா தற்பொழுது வயது அதிகமானாலும் பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார் அதற்கு காரணம் அவருடைய பிட்னஸ் தான் ஒரு நாளைக்கு அதிக நேரம் உடற்பயிற்சி, யோகா கொன்றவற்றை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நயன்தாரா? ஐயா படத்தின் போது ஊத்துக்குளி வெண்ண போல கொழுக் மொழுக்கின்னு இருந்தார்.

லட்சுமி மேனன்  : சினிமா ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த லட்சுமி மேனன் றேக்க, வேதாளம் போன்ற சமயங்களில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்டார் இதனால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வர தற்போது உடல் எடையை குறைத்து வருகிறார் இருந்தாலும் இவரால் பிக்னிக் டிரஸ் மற்றும் டைட்டான டிரஸ் போட்டால் அந்த அளவிற்கு எடுப்பாக இருக்காது.