குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா.? கடைசி நேரத்தில் வேலையை காட்டிய விஜய்

Kushi Movie : வெற்றிக்காக போராடும் பல புது இயக்குனர்களுக்கு வாய்ப்பை கொடுத்தவர் அஜித் அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யா உடன் கூட்டணி அமைத்து அஜித்தின் நடித்த வாலி திரைப்படம் வெளியாகி அதிரி புதிரி  ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து குஷி படத்தை எடுத்தார்.

அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதன் பிறகு எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக அவதாரம் எடுத்தார் அந்த படம் சொல்லு செல்லும்படி ஓடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா தற்போது வில்லனாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் சரவணன் விக்ரமுக்கு வந்த சோதனை.. அடடா அவருடைய கனவு கனவாகவே போச்சே..

வாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ். ஜே. சூர்யா பிரபுதேவா வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார் அந்த படம்தான் குஷி என்கின்றனர். இந்த நிலையில் குஷி படம் குறித்தும், விஜய் குறித்தும் பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

வாலி படத்தின் வெற்றியை அறிந்த விஜய் உடனே எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என விஜய் ஆர்வம் காட்டியிருக்கிறார். அதன்பின் பிரபுதேவா வைத்து எஸ்.ஜே. சூர்யா இயக்க இருந்த குஷி படத்தில் அவரை நீக்கிவிட்டு விஜய்யை அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார்.

சினிமா பட பாணியில் நிஜ வாழ்க்கையில் நடந்த கடத்தல்.! சம்பவம் செய்த லோகேஷ் கனகராஜ்.!

இப்படி தான் குஷி படம் உருவானது என பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் கூறியுள்ளார் இதனை அறிந்த ரசிகர்கள் குஷி படத்தில் பிரபுதேவா நடித்திருந்தாலும்  நன்றாக தான் இருக்கும்  எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் மேலும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்