விடாமுயற்சி படத்தின் பாடல், தீம் மியூசிக் இப்படித்தான் இருக்கணும்.. அனிருத்துக்கு கட்டளையிட்ட ஷாலினி.!

Ajith : தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து உள்ளவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு 230 கோடி வசூல் அள்ளி மாபெரும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருட்ச அளவில் தயாரித்து வருகிறது படத்தின் முதல் கட்ட சூட்டிங் வெளிநாட்டில் ஜோராக நடைபெற்று வருகிறது அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வெளியாகின்றன.

மாப்ள அர்ஜுன் நீ போடற மனக்கணக்கை சுக்குநூறா ஒடச்சிடுவான் தமிழ்.! தப்பான ஆள லவ் பண்றியே மேக்கனா… தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்

முதல் கட்ட ஷூட்டிங் தொடர்ந்து அபுதாபி மற்றும் துபாயில் ஷூட்டிங் இருப்பதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ரெஜினா நடிப்பதாகவும், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், பிக்பாஸ் ஆரவ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் இந்த நிலையில் அஜித்தின் காதல் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள், மகன் ஆகியவர்கள் இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்து உள்ளனர்.  அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இது எந்த மாதிரியான சந்திப்பு என்று தெரியவில்லை..

வீட்டு பத்திரத்தை வைத்து அப்பாவை காப்பாற்ற மீனாவை தேடி திரியும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ஒருவேளை விடாமுயற்சி படத்தில் வரும் பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் நன்றாக வரணும் என அனிருத்தை சந்தித்து சொல்ல வந்தாரா ஷாலினி என ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்ட் அடித்து வருகின்றனர். இது எப்படியோ அனிருத், ஷாலினி குடும்பம் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.