வீட்டு பத்திரத்தை வைத்து அப்பாவை காப்பாற்ற மீனாவை தேடி திரியும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode October 31 : இன்றைய எபிசோடில் அண்ணாமலையை பார்க்க மீனா ஹாஸ்பிடலுக்கு போன இடத்தில் விஜயா பார்க்க விடாததால் பிறகு கோவிலுக்கு வந்து மாமாவுக்கு சரியாகனும் என அங்க பிரதேசனம் பண்ணி வேண்டிக் கொண்டிருக்கிறார்.. அடுத்து ஹாஸ்பிடலில் அண்ணாமலைக்கு பல்ஸ் ரொம்ப லோ ஆகிறது.

அதனால் டாக்டர் சீக்கிரம் ஆஞ்சியோ பண்ணி ஆகணும் பணம் கட்டிடுங்க என்று சொல்ல விஜயா முத்து எல்லோரும் பணத்துக்கு என்ன பண்ணுவது என யோசிக்கும் பொழுது ரோகிணி நம்ம வீட்டு பத்திரத்தை வைத்து இப்போதைக்கு மாமாவ குணமாக்கணும் என்று சொல்ல உடனே பத்திரம் மீனா கிட்ட இருக்கே என விஜயா சொல்வதும் பிறகு முத்து சரி நான் வீட்ல போய் எடுத்துட்டு வரேன் என்று வீட்டிற்கு வருகிறார்.

49 வயதிலும் குறையாத கவர்ச்சி.. வயதான காலத்திலும் பருவப்பெண் போல் காட்சியளிக்கும் கஜோலின் ஹாட் க்ளிக்ஸ்!

வீட்டில் வந்து பீரோ சாவி இல்லாததால் மீனாவுக்கு போன் பண்ணி பார்க்கிறார் ஆனால் மீனா போன் எடுக்கவில்லை அதனால் பீரவை உடைத்து பத்திரத்தை தேடி பார்க்கிறார் பத்திரம் பீரோவில் இல்லை அதனால் திரும்ப ஹாஸ்பிடலுக்கு வந்து மனோஜிடம் பத்திரத்தை நீ தான எடுத்த எங்க வச்சிருக்கன்னு சொல்லு என்ன சண்டை போடுகிறார்.

அதற்கு ரோகிணி பத்திரம் உங்க பொண்டாடி மீனா கிட்ட கேளுங்கன்னு சொல்ல போன் எடுக்கல என்று சொல்கிறார் பிறகு திரும்பவும் மீனாவை தேடி முத்து இந்திரா வீட்டிற்கு வருகிறார் அங்கு வந்து மீனாவை கூப்பிட்டு பார்த்தார் வீடு பூட்டி இருக்கிறது பிறகு பக்கத்தில் இருப்பவர்கள் மீனா அவங்க அம்மா எல்லாருமே கோவிலுக்கு போயிருக்காங்க என்று சொல்ல..

12 நாட்களைக் கடந்த லியோ.. தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா?

முத்து பிறகு கோவிலுக்கு வந்து ஐயரிடம் மீனாவிற்கு வந்தாங்களாம் என்று கேட்கிறார் ஐயரும் நான் மீனாவை பார்க்கவில்லை என சொல்கிறார் பிறகு கோவில் வாசலில் இருக்கும் ஒருவர் இப்பதான் மீனா அவங்க அம்மா தங்கச்சி மூனு பேரும் ஆட்டோல ஏறி போனாங்க என்று சொல்ல முத்து எங்க போய் தேடுவது என தெரியாமல் சுத்திக் கொண்டிருக்கிறார்.

அடுத்து மீனா ஒரு பூசாரி இடம் போய் மாமாவுக்கு சரியாகிவிடுமா என்று கூறி கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர் ஒரு கயிறை கொடுத்து இதை உங்க மாமனார் கைல கட்டுங்க சரியாயிடும் என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.