12 நாட்களைக் கடந்த லியோ.. தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா?

Leo Movie Box Office: விஜய்யின் லியோ படம் 12 நாட்களை நிறைவு செய்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் லியோ படம் வெளியாகுவதற்கு முன்பு இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் லியோ படத்தை ஆஹோ ஓஹோ என கொண்டாடி வந்தனர். பயங்கர பில்டப் இருந்த காரணத்தினால் தான் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது.

இமான் அண்ணே.. அப்ப மட்டும் நைட் பார்ட்டிக்கு அனுப்பி வச்சீங்க இப்ப ஏன் புலம்புரிங்க.! சர்ச்சையை கிளப்பிய பிரபலம்.

இவ்வாறு கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் கல்லா கட்டி வருகிறது. அப்படி தற்பொழுது வரையிலும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 19ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ வெளியானது.

விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து வசூலில் நல்ல லாபத்தை பெற்று வந்தது பிறகு மற்ற நாட்களில் மந்தமாகவே வசூல் இருந்த நிலையில் மீண்டும் வாரத்தின் இறுதியான கடந்த சனி, ஞாயிறு நாட்களில் வசூல் சூடு பிடிக்கத் தொடங்கியது. தற்பொழுது உலக அளவில் பட்டையை கிளப்பி வரும் லியோ தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Leo : அந்த சீனில் நடிக்கும் போது ரொம்ப பயமாக இருந்தது – மனம் திறந்து பேசிய மடோனா செபஸ்டியன்

அதன்படி லியோ படம் தமிழகத்தில் மட்டும் கடந்த 12 நாட்களில் ரூபாய் 185 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாம் இனிவரும் நாட்களிலும் லியோ படம் அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.