படையப்பா பாட்டில் வரும் குழந்தையா இது.! அட இப்ப இவங்க பேமஸ் நடிகையாச்சே..

Rajinikanth: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் ரஜினிகாந்த் தற்போது வரையிலும் மார்க்கெட் குறையாமல் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். அப்படி 70து வயதை கடந்த பிறகும் மார்க்கெட் குறையாமல் ஜொலித்துவரும் ரஜினிகாந்தின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் 800 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது இந்த படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

அட்ஜஸ்மெண்டுக்கு நான் ரெடி.. இடத்தை நான் தான் சொல்லுவேன்.. பகீர் கிளப்பிய சீரியல் நடிகை

இவ்வாறு ரஜினி தனது சினிமா கேரியரில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். அந்த வகையில் முக்கியமான திரைப்படம் தான் படையப்பா இப்படத்தில் இடம்பெற்று இருந்த ‘என் பேரு படையப்பா’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. இதில் குழந்தையாக நடித்தது தற்பொழுது பேமஸான நடிகை அது என்பது தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் படையப்பா. இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் முக்கியமாக வில்லியாக நடித்த மிரட்டியவர் தான் ரம்யா கிருஷ்ணன். இவருடைய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது எனவே இப்படத்தில் நடித்திருந்த அனைத்து பிரபலங்களின் நடிப்பும் ரசிகர்களை கவர பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதிகபட்சம் 5 நிமிஷம் தான்… சாக்கு பையில் பணத்தை மூட்டை கட்டிய 5 நடிகைகள்.. இதுல சமந்தாவுக்கு நிமிஷத்துக்கு ஒரு கோடி..

ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது. இதன் மூலம் நெருங்கிய நண்பர்களாக கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்த் மாறினார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்களுடைய கூட்டணியில் லிங்கா படம் வெளியானது ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. படையப்பா படத்தில் பாசமுள்ள குழந்தை அப்பா என்ற பாடலில் வரும் பொழுது ஒரு சிறுமி குழந்தையின் முகம் படத்தில் இடம்பெறும்.

Hima Bindhu
Hima Bindhu

அதன் பிறகு ரஜினியின் முகம் வரும் அந்த குழந்தை வேறு யாரும் கிடையாது சீரியலில் கலக்கி வரும் ஹேமா பிந்துதான். ஹேமா பிந்து தற்பொழுது தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.