சன் டிவியினால் அடித்த அதிர்ஷ்டம்.. புதிய ரெஸ்டாரண்ட் தொடங்கிய சீரியல் நடிகை

Sun TV serial actress: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருவது வழக்கம். அப்படி சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் ஏராளமான நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கான ஒரு இடத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

அந்த வகையில் சன் டிவி சீரியலின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் புதிதாக ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும் நிலையில் அதற்கான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கியமான சீரியல் தான் ரோஜா.

மீண்டும் இணையும் நெல்சன்-விஜய்.! பார்ட்டியில் நடந்த உண்மையை உடைத்த பிரபலம்..

அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதில் நடிகர் சிம்பு மற்றும் பிரியங்கா நல்காரி இருவரும் ஜோடி போட்டு நடித்திருந்தார்கள். இதன் மூலம் இவர்களுக்கென ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது.

இந்த சீரியலின் முடிவிற்கு பிறகு பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். இவ்வாறு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரியங்கா தனது காதலருடன் திருமணம் செய்து கொண்டதால் சீரியலில் இருந்து விலகினார். எனவே தற்போது மீண்டும் ஜீ தமிழில் தயமந்தி என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

38 வயசுலயும் டார்கெட் பண்ணி அடித்த அசின்.! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இவ்வாறு சீரியல்களில் நடித்து வரும் பிரியங்கா நல்காரி சோசியல் மீடியாவிலும் தொடர்ந்து தான் எங்கு சென்றாலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி இவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு பூஜை போட்டு தொடங்கி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர ரசிகர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

priyanga nalkari
priyanga nalkari