மீண்டும் இணையும் நெல்சன்-விஜய்.! பார்ட்டியில் நடந்த உண்மையை உடைத்த பிரபலம்..

Actor Vijay: நெல்சன் திலீப்குமார் மற்றும் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருப்பதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பிரமஹம்சா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில் இப்படத்திற்கு ஏக போக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஏனென்றால் இதற்கு முன் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால் பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் கல்லா கட்டியது. எனவே இதனால் நெல்சன் திலீப்குமாரை ஏராளமானவர்கள் அவமானப்படுத்தி வந்தனர்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மொத்தமாக மாறிய அஜித்.! விடாமுயற்சி கெட்டப் சூப்பரா இருக்கே.. ரசிகர்கள் உற்சாகம்

எனவே இந்த சூழலில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு படக்குழுவை அழைத்து ஒரு விருந்து வைத்துள்ளார் விஜய். எனவே பீஸ்ட் படத்தின் தோல்விக்காக விருந்தா என ரசிகர்களும் ட்ரோல் செய்த நிலையில் இந்த விருந்தில் கலந்து கொண்ட லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பமரஹம்சா சமீப பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது அந்த பார்ட்டி பீஸ்ட் படத்திற்காக நடைபெறவில்லை நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் இணைய போகிறேன் என்று விஜய் சொல்வதற்காக நடந்த பார்ட்டி தான் அது. அந்த பார்ட்டியில் தான் நான் லியோ படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறேன் என்பதையும் அறிவித்தனர் என மனோஜ் பரமஹம்சா பேட்டி அளித்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நீ எப்படி சாப்பிடுவனு நான் பாத்துடுற என மாயாவிடம் சவால்விடம் பூர்ணிமா.! பரபரப்பான ப்ரோமோ..

விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி அன்று வெளியான லியோ திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் ஒரு வாரம் முடிவில் ரூபாய் 461 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.