நீ எப்படி சாப்பிடுவனு நான் பாத்துடுறன் என மாயாவிடம் சவால்விடம் பூர்ணிமா.! பரபரப்பான ப்ரோமோ..

Bigg Boss Tamil Season 7 today promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில் 4வது வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி டாஸ்கின் மூலம் போட்டியாளர்களுக்கு இடையே கடும் விவாதங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்து ஒன்றாக சுற்றி வந்த பூர்ணிமா, மாயா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது மாயா நாரத வேலை பார்த்து இந்த சீசனின் கண்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக இருந்து வருகிறார். அப்படி இவர் செய்யும் வேலைகளை வைத்து சக ஹவுஸ் மேட்ஸ்கள் மாயாவை டார்கெட் செய்து வருகின்றனர்.

வசமாக மாட்டிய பிக் பாஸ் போட்டியாளர்.. செட்டுக்கே வந்து அரெஸ்ட் செய்த வனத்துறையினர்.! 5 பேருக்கு நோட்டீஸ்

அதேபோல் மாயாவும் அனைத்து போட்டியாளர்களையும் நேருக்கு நேராக பேசி சண்டை போட்டு வருகிறார். அப்படி நேற்று கூட விசித்ரா மாயாவுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது ஆனால் ஒரு கட்டத்தில் மாயா விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டு இணைந்தார். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயா நிக்சனிடம் எனக்கு சாப்பாடு வேணும் நீங்க ஒப்புக்கொண்டால் நான் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு வரேன் என்று சொல்கிறார்.

அதுக்கு நிச்சயம் சரி வாங்க நான் பார்த்துக்கிறேன் என்று கூற உடனே மாயா, ஸ்கூல் சுரேஷ் ஸ்மால் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். அப்பொழுது பூர்ணிமா மாயாவிடம் யாரு கேட்டு அங்க போனீங்க கேப்டன் கிட்ட கேட்கணும் என்று வாக்குவாதம் செய்கிறார். அதாவது பூர்ணிமா மாயாவிடம் என்னுடைய பேச்சை கேட்காம நீங்க அங்க போனீங்க என்று சொல்ல அதற்கு மாயா நீங்க ஏன் போக கூடாதுன்னு சொல்றீங்க என்று சொல்ல அதற்கு பூர்ணிமா நீங்க போனதுல எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறுகிறார்.

லியோ படத்தால எங்கள கசக்கி புழிஞ்சிட்டாங்க.. 70- 80% கேட்டா எப்படி? தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை

அதற்கு மாயா என்ன பாத்துக்க தான் நான் இங்க வந்து இருக்கேன் உங்கள எல்லாம் பாத்துக்க நான் இங்க வரல என்று சொல்ல  அதற்கு பூர்ணிமா எப்படி சாப்பிடுறீங்கன்னு நான் பார்த்திருக்கிறேன் என்று கூற இதற்கு மாயா அதிர்ச்சி அடைகிறார்.