வசமாக மாட்டிய பிக் பாஸ் போட்டியாளர்.. செட்டுக்கே வந்து அரெஸ்ட் செய்த வனத்துறையினர்.! 5 பேருக்கு நோட்டீஸ்

Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஏராளமான போட்டியாளர்கள் இதன் மூலம் ஜெயித்தால் தங்களுக்கு பணம் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய முடியும் என்பதற்காகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காமித்து வருகின்றனர்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரபலங்களும் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் தற்பொழுது பிக் பாஸ் போட்டியாளர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் ஐந்து பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் சிலையை கடவுளாக நினைத்து வழிபட்டு வரும் ரசிகர்.! புகைப்படத்தால் நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

அதாவது கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த வர்த்தூர் சந்தோஷ் என்பவர் தனது கழுத்தில் புலி நகத்துடன் கூடிய சங்கிலி ஒன்றை அணிந்திருப்பதாக கூறினார். அது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேராக சென்ற வனத்துறையினர் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையில் அவர் அணிந்திருந்தது உண்மையான புலி நகங்கள் கொண்ட சங்கிலி என்பது தெரியவந்தது எனவே அவரை போலீசார்கள் கைது செய்தார்கள். இதனை அடுத்து நடிகர் தர்ஷன், நிகில் குமாரசாமி, பாஜக எம்.பி ஜக்கேஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பிரபல சாமியார் வினய்குருஜி ஆகியோர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்களாம்.

38 வயசுலயும் டார்கெட் பண்ணி அடித்த அசின்.! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

எனவே இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இதனால் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

bigg bogg kannada
bigg bogg kannada