ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மொத்தமாக மாறிய அஜித்.! விடாமுயற்சி கெட்டப் சூப்பரா இருக்கே.. ரசிகர்கள் உற்சாகம்

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் தற்பொழுது தனது 62வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்தாலும் இதுவரையிலும் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சூழலில் விடாமுயற்சி படத்திற்காக அஜித் மொத்தமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு தன்னுடைய கெட்டப்பை மாற்றி உள்ளார் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கோலிவுட்டில் அல்டிமேட் மாஸ் ஹீரோவாக இருந்து வரும் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நீ எப்படி சாப்பிடுவனு நான் பாத்துடுற என மாயாவிடம் சவால்விடம் பூர்ணிமா.! பரபரப்பான ப்ரோமோ..

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் திரிஷா, ப்ரியா பவானி சங்கர், மகிழ் திருமேனி, அஜித் ஆகியவர்கள் படப்பிடிப்பிற்காக ஆஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

ajith kumar
ajith kumar

இந்நிலையில் கடந்த வாரம் விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். எனவே இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி இருக்கும் நிலையில் அஜித்தின் நியூ லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.

வசமாக மாட்டிய பிக் பாஸ் போட்டியாளர்.. செட்டுக்கே வந்து அரெஸ்ட் செய்த வனத்துறையினர்.! 5 பேருக்கு நோட்டீஸ்

அதாவது முழுவதுமாக நரைத்த முடியுடன் சில்வர் ஹேர் ஸ்டைலில் கொஞ்சம் டிரீம் செய்யப்பட்ட மீசை, தாடி உடன் முழுவதும் வைட் ஹேர் ஸ்டைலில் செம மாஸ் ஆக போஸ் கொடுத்துள்ளார். இந்த லுக் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்திருக்கும் நிலையில் அஜித்தின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விரைவில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.