சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

vadakkupatti ramasamy 3rd day collection : நடிகர் சந்தானம் காமெடி ஹீரோவாக நடித்து வந்து பிறகு ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இவர் காமெடியனாக நடித்த பல திரைப்படங்கள் காமெடிக்காகவே வெற்றி நடை போட்டு உள்ளது ஆனால் ஒரு காலகட்டத்தில் இனிமேல் காமெடியனாக நடிக்க முடியாது என முழு நேர ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார்.

அந்த வகையில் சந்தானம் நடிப்பில் வெளியாகிய தில்லுக்கு துட்டு டிக்கிலோனா டிடி ரிட்டன்ஸ் என பல திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி.

மைக் மோகனை உருகி உருகி ஒருதலையாக காதலித்த நடிகை.! 3 குழந்தைக்கு தாயான அந்த நடிகை யார்.! வெளியான ரகசியம்..

இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் நிழல்கள் ரவி, மாறன், எஸ் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் ஒரு தரப்பு ரசிகர்கள் வடக்கு பட்டி ராமசாமி திரைப்படத்தை பார்த்து விட்டு கலவையான விமர்சனங்களை கொடுத்தார்கள் அதேபோல் இன்னொரு தரப்பு ரசிகர்கள் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சூப்பராக இருக்கிறது என கூறியுள்ளார்கள் இப்படி கலவையான விமர்சனங்களை பெற்ற வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது.

ஒரே படத்தில் பல பாடகர்கள் இந்த பெருமை கேப்டன் படத்திற்கு மட்டும்தான்.! என்ன திரைப்படம் தெரியுமா.?

முதல் நாள் முடிவில் 1.5 கோடி வசூல் செய்திருந்த வடக்குப்பட்டி ராமசாமி இரண்டாவது நாள் முடிவில் 1.5 கோடி என இரண்டு நாள் முடிவில் மூன்று கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது இந்த நிலையில் மூன்றாவது நாள் முடிவில் 5.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது வார இறுதியில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.