ஒரே படத்தில் பல பாடகர்கள் இந்த பெருமை கேப்டன் படத்திற்கு மட்டும்தான்.! என்ன திரைப்படம் தெரியுமா.?

Actor Vijayakanth: நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் தற்பொழுது நம்முடன் இல்லை என்றாலும் அவருடைய நினைவுகள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. சினிமாவில் தொடர்ந்து வெற்றினை சந்தித்து வந்த விஜயகாந்த் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தார்.

அரசியலில் தொடர்ந்து முன்னேற்றங்களை சந்தித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது எனவே தன்னால் முடிந்த வரை பணியாற்றி வந்த இவர் பிறகு ஓய்வு பெற்று வந்தார். மேலும் சில ஆண்டுகளாக அவருடைய மகன்கள் தான் அவரைப் பார்த்து வந்தனர் இவ்வாறு இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதன் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முத்து சொன்ன கார் ஓட்டற வேலையே பரவாயில்ல நீங்க இப்ப பாக்குற வேலைக்கு.. மீண்டும் குடும்பத்தாரிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்.. துருவி துருவி கேட்கும் ரோகினி..

கேப்டனின் நினைவிடத்திற்கு இன்று வரையிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இவ்வாறு விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு இவரைப் பற்றி ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது அப்படி விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் மொத்தம் 12 பாடகர்கள் பாடிய உள்ளனர்.

அதாவது தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகர் படத்திலும் இத்தனை பாடகர்கள் ஒரு படத்திற்க்கு கூட பாடியது கிடையாதாம். ராஜராஜ சோழன் படத்தில் மொத்தம் 9 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். மேலும் முத்துராமன் சிவாஜியும் அந்த படத்தில் பாடியதாக கூறப்படுகிறது அப்படி இவர்களை சேர்த்து மொத்தம் 11 பேர் தான்.

அர்ஜுனை பிடிக்க வலையை விரித்த தமிழ்.! வலையை கிழித்துக்கொண்டு சுறா மீன் போல் தப்பி சென்ற மாப்பிள்ளை.!

இதனை அடுத்து கர்ணன் திரைப்படத்திலும் மொத்தம் 8 பாடகர்கள் பாடி இருப்பதாகவும் ஆனால் விஜயகாந்தின் படத்தில் மட்டும் தான் மொத்தம் 12 பாடகர்கள் பாடியுள்ளனர். அதாவது விஜயகாந்த் நடிப்பில் 2000ஆம் ஆண்டில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான வானத்தைப்போல திரைப்படத்தில் தான் 12 பாடகர்கள் பாடிவுள்ளனர்.