நோயால் அவதிப்பட்ட சமந்தா.. படப்பிடிப்பில் நிற்க முடியாமல் மயங்கி விழுந்ததால் பரபரப்பு… பதறி அடித்து ஓடிய படக்குழு..

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தன்னுடைய வீவாகரத்துக்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய உடல்நிலை தேறி உள்ளதை வெளிப்படுத்தும் விதமாக அடிக்கடி ஜிம் ஒர்க் அவுட் வீடியோ, புகைப்படம் என அனைத்தையும் வெளியிட்டு வருவார் சமந்தா. தற்பொழுது ஓரளவு உடல் நிலை தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று தற்பொழுது தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா நோயால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு கிட்டத்தட்ட அரை மணி நேரம் கூட ஒரு இடத்தில் நிற்க முடியாத அளவிற்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சந்தோஷத்தில் சித்ரா.!! மகாவால் சமையல்காரியான ராஜலட்சுமி.! ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமா….

இந்த நிலமை படப்பிடிப்பு தளத்திலும் அவருக்கு நிகழ்ந்துள்ளதாம். அப்படித்தான் கடுமையான சண்டை பயிற்சியில் சமந்தா நடித்துக் கொண்டிருந்தார் அந்த கடுமையான சண்டை பயிற்சிக்கு டூப் போடாமல் சமந்தாவே நடித்துள்ளார் அது வேற எந்த படமும் கிடையாது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் என்னும் தொடர்தான்.

இதில் தான் கடுமையான சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்குகிறார்கள். ஏற்கனவே இவர்கள் இயக்கத்தில் ஃபேமிலி மேன் 2 தொடரில் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படிப்பு to நடிப்பு வாழ்க்கையில் கொஞ்ச நஞ்ச கஷ்டமா..! சிறகடிக்க ஆசை மீனாவின் சோகமான மறுபக்கம்..

இந்த வெப் தொடரில் கடுமையான சண்டை காட்சி ஒன்றில் தன்னுடைய உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தும் டூப் போடாமல் சமந்தா நடித்துள்ளார். அந்த சண்டை காட்சி முழுமையாக முடித்துவிட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார் சமந்தா. உடனே இவர் மயங்கி விழுந்ததும் படக்குழுவினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் பதறி போய்விட்டார்கள் உடனே அவரை  மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமந்தா டூப் போடாமல் நடித்துள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதேபோல் உடல் நலத்திலும் கவனம் தேவை என்றும் சமந்தாவுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள். சமந்தா விரைவில் குணமடைய பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.