சந்தோஷத்தில் சித்ரா.!! மகாவால் சமையல்காரியான ராஜலட்சுமி.! ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமா….

aaha kalyanam : ஆஹா கல்யாணம் சீரியல் இன்றைய எபிசோடில் சூர்யா ராஜலட்சுமியிடம் அம்மா நான் எந்த இடத்திலும் உங்களை விட்டுக் கொடுக்கல என்னுடைய சூழ்நிலை சரியில்ல என்ன புரிஞ்சுக்க வேண்டிய நாள் வரும் அதுக்காக நான் காத்துட்டு இருக்கேன் அப்ப நீங்க புரிஞ்சிப்பீங்க எதுக்காக நான் இப்படி பண்ணனு தெரிஞ்சிக்குங்க  என சொல்லி விட்டு அங்கிருந்து செல்கிறான்.

பின்னர் மகா அவங்க அம்மா கோடீஸ்வரிக்கு கால் பண்ணுகிறாள். ஏம்மா இவ்வளவு போன் கால் பண்ணி இருக்கீங்க என்ன பிரச்சனை என கேட்கிறாள். உடனே அவங்க அம்மா என் மனசு சரியில்லம்மா அங்க உனக்கு ஏதாவது பிரச்சனையா மா நீ ஏம்மா போனு அட்டென்ட் பண்ணல என கோடிஸ்வரி கேட்கிறார். அதற்கு மகா பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லம்மா நான் நல்லா தான் இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா என கேட்டுவிட்டு போனை வைத்து விடுகிறாள்.

விஜய் பிரபாவை பார்ப்பதற்கு செல்கிறார். அங்கு பிரபாவிடம் அனாமிகாவுக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணுவது என கேட்கலாம் என நினைக்கிறான்.  ஆனால் பிரபா அனாவிகா மீது கோபமாக இருப்பதால் இப்போது சூழ்நிலை சரியில்லை கேட்க வேண்டாம் என விட்டுவிடுகிறான்.

ராஜலட்சுமி கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கிறாள்.  அப்போது அங்கு வந்து சித்ரா அதை ஒளிந்து நின்று பார்த்து என்ன ஆட்டம் ஆடுன இப்பதான் எனக்கு சந்தோசமா இருக்கு ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து என்னை எப்படி எல்லாம் கேவலப்படுத்துவீங்க. இப்ப சமையல் தனியாச்சு இனிமே ஒன்னு ஒன்னா பிரிச்சு சொத்தை பிரிச்சு என்ன பண்றான் பாருங்க என சித்ரா மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறாள்.

ராஜலட்சுமி காய் நறுக்குவதை பார்த்துக் கொண்டிருக்கிறாள் காயத்ரி. அப்போது மகா வருகிறார்கள். அவளும் ராஜலட்சுமி காய் நறுக்குவதை பார்த்துவிட்டு காயத்ரியிடம் அத்தை நீங்களாவது போய் வேணான்னு சொல்லலாம்ல என கேட்கிறாள். அதற்கு காயத்ரி ராஜலட்சுமி அக்கா பத்தி உனக்கு தெரியாதா,அப்பா, என்னால முடியாது இந்த வீட்ல இனி என்ன என்ன பிரச்சனை வரப் போகுதோ நினைச்சாலே பயமா இருக்கு என சொல்கிறாள்.

பிறகு மகா ராஜலட்சுமியயை பார்ப்பதற்காக அவளது ரூமுக்கே செல்கிறாள். ஆனால் ராஜலட்சுமி மகாவை பார்த்ததும் அவரது ரூமின் கதவை மூடி விடுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.