வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த பிரபலங்களின் சம்பள விவரம்.! விசித்ராவிற்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்குபவர் கானா பாலாவா?

Bigg Boss wild Card Entry: தமிழில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ஆம் தேதி துவங்கப்பட்டு நான்கு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீசன் ஆரம்பத்தில் சுவாரசியம் குறைவானதாக இருந்தது.

எனவே வைல்ட் கார்டில் ஐந்து பிரபலங்களை இறக்கியுள்ளனர் மேலும் சுவாரசியம் குறைவாக இருந்த அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர்கள் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று அடுத்தடுத்து வெளியேறினார்கள். பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஜீவானந்தத்தை கரு அறுக்க கதிரிடம் பூஜை போட சொன்ன குணசேகரன்.. அப்பத்தாவுடன் பாதுகாப்பாக நிற்கும் மருமகள்கள்.!

தற்பொழுது 19 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர்களை டார்கெட் செய்து பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து அனைத்து டாஸ்க்குகளிலும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.

எனவே இதனால் பல சண்டை சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் நேற்று நடந்த டாஸ்கில் பிரதீப் கூல் சுரேஷை மிகவும் தவறாக பேசியதை காண முடிகிறது. எனவே பிரதீப்பிற்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் இந்நிக்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களுக்கும் எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கடற்கரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஹாட் ஃபோட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால்.!

விஜே பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 12000 சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இவரை தொடர்ந்து அர்ச்சனாவிற்கு ரூபாய் 18000, அன்னபாரதி ரூபாய் 20000, தினேஷ் ரூபாய் 20000, கானா பாலா ரூபாய் 25000 என சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இந்த பிக் பாஸ் சீசன் 7 அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளராக விசித்ரா திகழ்கிறார் அதன்படி ஒரு நாளைக்கு ரூ28 ஆயிரம் விசித்ராவிற்கு சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம். இவரை அடுத்து கானா பாலாவுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் தரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.