தேசிய பதக்கங்களை வாசலில் வைத்து விட்டு கடிதம் எழுதி சென்ற திருடன்.!

Director manikandan: காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற இரண்டு மாபெரும் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மணிகண்டன் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த மணிகண்டன் தனது முதல் திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றார்.

குற்றமே, தண்டனை ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கி வந்த மணிகண்டன் கடைசியாக 2002ஆம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தை இயக்கினார் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல புதுமுக பிரபலங்களும் இணைந்து நடித்தனர். நல்லாண்டி என்ற உண்மையான விவசாயியை மையமாக வைத்து இப்படம் உருவானது.

சிக்கிய கலிவரதன் மாட்டிய ஆதாரம்… டார்ச்சர் செய்ததால் ஜெயில் வார்டன் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய சரஸ்வதி… தொக்கா பிடிக்கப் போகும் தமிழ்..

பலரும் இப்படத்தினை பாராட்டிய நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெற்ற 69வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியலில் கடைசி விவசாயி இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றது. இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் இருந்த தேசிய விருது உள்ளிட்ட பணம் மற்றும் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

மணிகண்டனின் சொந்த ஊர் உசிலம்பட்டி இவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டும் அங்கேயே உள்ளது மணிகண்டன் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் சென்னையில் இருக்கும் வீட்டில் வசித்து வருவது வழக்கம். அந்த வகையில் இரண்டு மாதங்களாக படப்பிடிப்பின் பணிகளுக்காக தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருடைய கார் ஓட்டுநர் தான் அந்த வீட்டை கவனித்து வந்துள்ளார்.

அந்த வகையில் மாலை 4 மணி அளவில் நாய்க்கு உணவு வைப்பதற்காக ஓட்டுநர் வீட்டிற்கு சென்று பார்க்க அப்பொழுது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீஸார் உடனடியாக சம்பவ இடத்தில் விசாரிக்க அப்பொழுது கடைசி விவசாயி படத்திற்காக வாங்கிய இரண்டு தேசிய விருதுகள், வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் 5 பவுன் நகை போன்றவை திருடப்பட்டு இருந்தது.

சிக்கிய கலிவரதன் மாட்டிய ஆதாரம்… டார்ச்சர் செய்ததால் ஜெயில் வார்டன் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய சரஸ்வதி… தொக்கா பிடிக்கப் போகும் தமிழ்..

இந்நிலையில் இயக்குனர் மணிகண்டனின் வீட்டில் பணம் நகை மற்றும் வெள்ளி பதக்கங்களை கொள்ளை அடித்து சென்ற மர்மகும்பல் மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலித்தீன் பையில் தேசிய விருதுகளான வெள்ளி பதக்கங்களை மட்டும் திரும்பி வைத்து அதோடு கடிதம் ஒன்றையும் விட்டு சென்றுள்ளனர். அதில் ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு என்று எழுதி வைத்துள்ளனர்.