mayil samy : தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் தற்பொழுது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் சந்தானம், சூரி என பலரை கூறிக் கொண்டே போகலாம் அந்த வகையில் தற்பொழுது ஆர்ஜே பாலாஜி அவர்களும் இணைந்துள்ளார். இவர் முதலில் சிறு சிறு கதாபாத்திரத்தில் படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக எல்கேஜி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். எல்கேஜி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது ரசிகனிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் நாளே இப்படி ஒரு உடையா.! ஒழுங்கா ரூமுக்கு போ நயன்தாராவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இயக்குனர்.!
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி அவர்கள் மயில்சாமி குறித்து ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். அந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்துள்ளது. மயில்சாமி ஒருமுறை பென்ஸ் காரில் வந்துள்ளார். அப்பொழுது ஆர்ஜே பாலாஜி அவர்கள் எப்பொழுது அண்ணா பென்ஸ் கார் வாங்கினீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு மயில்சாமி என்னுடைய மனைவி வாங்கி கொடுத்தார் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். ஒரு முறை மயில்சாமி பக்கத்தில் நின்ற ஒரு பென்ஸ் காரை தொட்டுள்ளார். அதற்கு காரின் உரிமையாளர் அடிக்க வந்து விட்டார். அதனை தன்னுடைய மனைவி அவர்களிடம் கூறி அழுதுள்ளார். உடனே மயில்சாமியின் மனைவி மயில்சாமியின் ஐம்பதாவது பிறந்தநாளுக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக கொடுத்துள்ளார்.
அதனை ஆர்.ஜே பாலாஜி அவர்களிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மயில்சாமி பகிர்ந்து கொண்டார். அந்த தகவலை ஆர் ஜே பாலாஜி அவர்கள் சிங்கப்பூர் சலூன் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. மயில்சாமி ஒரு சமூக சேவகர், நல்ல மனிதர் அவருக்கு இந்த நிலமையா என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

