முதல் நாளே இப்படி ஒரு உடையா.! ஒழுங்கா ரூமுக்கு போ நயன்தாராவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் படத்தில் நடிப்பதை தாண்டி படங்களை தயாரிப்பதிலும் அதிக இன்ட்ரஸ்ட் காட்டி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பல தொழில்களையும் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

அந்த வகையில் நயன்தாரா கடைசியாக நடித்த திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை என்னதான் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் அன்னபூரணி திரைப்படமாக அமைந்தாலும் வலுவான திரைக்கதை இல்லாததால் இந்த திரைப்படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற முடியாமல் போனது,.

நோயால் அவதிப்பட்ட சமந்தா.. படப்பிடிப்பில் நிற்க முடியாமல் மயங்கி விழுந்ததால் பரபரப்பு… பதறி அடித்து ஓடிய படக்குழு..

இதனை தற்பொழுது நயன்தாரா டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாரா தமிழில் முதன்முதலாக சரத்குமார் நடிப்பில் வெளியாகிய ஐயா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.

சந்தோஷத்தில் சித்ரா.!! மகாவால் சமையல்காரியான ராஜலட்சுமி.! ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமா….

ஆனால் இப்பொழுது நயன்தாராவை பார்த்தால் அப்படி இருந்த நயன்தாராவா இப்படி மாறிவிட்டார் என பலரும் விமர்சனம் செய்யும் அளவிற்கு அவருடைய உடை ஸ்டைல் என அனைத்தும் மாறிவிட்டது. சரத்குமார் இரட்டை வேடத்தில் ஐயா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை ஹரி அவர்கள் இயக்கியிருந்தார்.

படபிடிப்பின் போது நயன்தாராவை கடுமையாக இயக்குனர் ஹரி திட்டி உள்ளார் என்ற தகவல் தற்பொழுது தெரியவந்துள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் நயன்தாரா பக்காவான மாடன் உடையில் வந்துள்ளார். இதனை பார்த்த ஹரி பங்கமாய் திட்டியுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஒழுங்கா ரூமுக்கு போ உன்னை எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறேன் இப்படி மாடன் உடையில் வந்து நிக்கிறியே என திட்டியுள்ளார்.

பக்க கிராமத்து ரோல் உனக்கு ஆனால் மாடன் உடையில் இப்படி வந்து நிற்கிற என கோபத்துடன் நயன்தாராவை திட்டியுள்ளார் முதலில் போய் இந்த உடையை மாற்று எனவும் கூறியுள்ளார். ஐயா திரைப்படத்தில் நயன்தாராவை ஹரி திட்டி உள்ளதை சமீபத்தில் சரத்குமார் அவர்கள் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.